SEKAR REPORTER

பிச்சப்பா Salem Advt: வணக்கம்அனுமதிக்க படாத பதவிகளில் பின்பக்க வாயில் வழியாக செய்யப்படும் நியமனங்கள் தவறானவை என கருத்துக்கூறி 1997 இல் இருந்து 2017 வரை பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மறுத்து உத்தரவுவிட்டது சரிதானா? 20 ஆண்டுகள் பணி புரியும் போது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[30/06, 09:57] பிச்சப்பா Salem Advt: வணக்கம்
அனுமதிக்க படாத பதவிகளில் பின்பக்க வாயில் வழியாக செய்யப்படும் நியமனங்கள் தவறானவை என கருத்துக்கூறி 1997 இல் இருந்து 2017 வரை பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மறுத்து உத்தரவுவிட்டது சரிதானா? 20 ஆண்டுகள் பணி புரியும் போது என்றாவது ஒருநாள் நிரந்தர படுத்துவார்கள் என்ற நப்பாசையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் கதி என்ன? பின்பக்க கதவுகளை திறந்து விட்டது யார்? பின்பக்கம் வழியாக நியமனம் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பின்பக்க வாயில் வழியாகத்தான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் என்று தெரிந்து அவர்களைத் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தொழிலாளர் தொழிலாளி உறவு ஏற்பட்டவுடன் தொழில் தாவா சட்டம் 1947, இன் படி, அதை கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஏற்படுகிறது அல்லவா? தொழிற்சாலைகள் சட்டம் 1986 இன் படி 480 நாட்கள் இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ன விதி வகுத்துள்ளது என்றால் அது இந்த வகையில் மீறப்பட்டது என்றால் சரி தானே? திருமணம் செய்யக்கூடாது என்றால் எந்த வகையிலுமே செய்யக் கூடாது தானே? இதை செய்த அதிகாரியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றால் சரிதானே? 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த ஒரு தொழிலாளியை நிரந்தர படுத்தாமல் பணியிலிருந்து நீக்கும்போது ID. Act 25 F க்கு முரணானது என்றால் சரிதானே. 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அந்த தொழிலாளிக்கு ஒன்று பணி வழங்க வேண்டும் அல்லது அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே? ஆகையால் இவ்வாறு பணி மறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை இந்த தொழிலாளர்களை பின்பக்க வாசல் வழியாக பணியமனம் செய்த அதிகாரிகள் மற்றும் அவர்களை நாலாவது தேதி வரை பணி தொடர அனுமதித்த அதிகாரி களுக்கு என்ன தண்டனை? இந்த அதிகாரிகளிடமிருந்து ஒருவேளை அவர்கள் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியத்தில் இருந்தும் பணியிலிருந்து வந்தால் அவரிடம் இருந்து ஒரு கணிசமான தொகையை இந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது எனது தாழ்வான வேண்டுகோள். மரியாதைக்குரிய நீதி அரசர்கள் இதை பரிசீலிக்க வேண்டும்.. பிச்சப்பா
[30/06, 09:58] பிச்சப்பா Salem Advt: திருமணம் என்பது நியமனம் என வாசிக்கவும்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version