SEKAR REPORTER

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் 2,000 சதுர அடியில் கல்லூரி கட்ட அனுமதி வாங்கினார். ஆனால், ஜஸ்டின் என்பவரின் இடத்தையும் ஆக்கிரமித்து 3,896 சதுர அடியில் கல்லூரியை கட்டியதாக நகர்புற திட்டமிடல் துறை துணை இயக்குநரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காததால் ஜஸ்டின் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 2001ல் அனுமதி வாங்கி விட்டதாக
வின்சென்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணையில் திட்ட இயக்குநர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பத்துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி வின்சென்ட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வின்சென்ட் தரப்பில் 2002ல் நிலம் வாங்கப்பட்டாதவும், விசாரணையில் ஜஸ்டின் என்பவரால்
2009ல் வாங்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. மேலும், கட்டிட திட்ட அனுமதி 2001ம் ஆண்டே வாங்கியது கூட்டு சதியை உறுதி செய்கிறது.

அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை செய்யலாம். சட்டத்திற்கு உட்பட்டு எந்த நடவடிக்கையும் வின்சென்ட் மீது எடுக்கலாம். நீதிமன்றம் லஞ்ச வழிப்புத்துறை விசாரணையில் தலையிடாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version