SEKAR REPORTER

மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பரபரப்பு பேட்டி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவற்றை திரும்பப் பெற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது என்றார்.

பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேட்டி மூன்று புதிய சட்டத்திற்கு எதிராக

வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்ட 2020ம் ஆண்டே, உச்ச நீதிமன்ற நீதிபதி, சட்ட வல்லுனர்கள் குழுவை நியமித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் எந்த விவாதங்களும் நடத்தாமல், பார் கவுன்சிலின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து மாநில பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து, சட்டத்தை திரும்பப் பெறும்படி பிரதமர், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர்களை வலியுறுத்தும்படி இந்திய பார் கவுன்சிலை கேட்டுக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிறகும் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழுவை நியமித்த தமிழக அரசின் முடிவுக்கும், சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கும் வரவேற்பு தெரிவித்தார்.

….

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார்.

சென்னையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குறித்து காவல் துறை அறிக்கை கிடைத்ததும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 120 வழக்கறிஞர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இனிமேல் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை நிரந்தரமாக நீக்குவது குறித்து கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.

குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்படுவதாகக் கூறிய அவர், வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version