01] Sethu Sir Dinamalar: மகிழ்ச்சியே நீ எங்கிருக்கிறாய்? * ‘‘அந்த நர்ஸ் பொண்ணு வந்துச்சு. எப்டி இருக்கீங்க பாட்டிம்மா ன்னு கேட்டு, என் கன்னத்தை பிடித்து கிள்ளி, முத்தம் கொடுத்துச்சுடா…’’

[11/16, 00:01] Sethu Sir Dinamalar: மகிழ்ச்சியே நீ எங்கிருக்கிறாய்?
*
‘‘அந்த நர்ஸ் பொண்ணு வந்துச்சு. எப்டி இருக்கீங்க பாட்டிம்மா ன்னு கேட்டு, என் கன்னத்தை பிடித்து கிள்ளி, முத்தம் கொடுத்துச்சுடா…’’

84 வயது தாயின் கண்கள் சுருங்கி, முகம் சிவக்க, இதழ் சிரிக்க, வெட்கம் பூக்க சொன்னதை பார்த்ததும் என் நெஞ்சு சில்லிட்டது.

முதல்நாள் இரவு வரை ‘மரண வலி’ அனுபவித்த ஒரு நோயாளியின் சூழலை, நொடிப்பொழுதில், தன் அன்பினால், மகிழ்ச்சி நிரப்பியிருக்கிறாரே ஒரு செவிலியர்.

ஒரு மருந்து செய்யாத மாயத்தை, அன்பு நிகழ்த்தி இருக்கிறது.

கடவுளுக்கா, செவிலியருக்கா யாருக்கு முதலில் நன்றி சொல்வதென்று புரியாமல் மனம் படபடத்தது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 5வது மாடி ஜன்னலோரம் நின்றபடி, எதிரே தேசியக்கொடி படபடக்க, கம்பீரமாக இருந்த செந்நிற சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆம்புலன்களிலும், அரசு பேருந்துகளிலும், ரயில்களிலும், சாலைகளிலும் விரையும் மனிதர்கள் எல்லாருக்குமே எதிர்பார்ப்பில்லாத, அப்பழுக்கில்லாத அன்பு, சக மனிதர்களிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று மனம் வேண்டிக்கொண்டது.

சமீபத்தில், அம்மா, இத்தனை சந்தோஷப்பட்டு பார்த்ததில்லை.

ஏழு வயது தியா பாப்பா, புனேவில் இருந்து வந்திருந்தபோது, அவளோடு, முகத்தோடு முகம் உரசி, முகம் மலர, மலர அம்மா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.

அருகில் போனால், அந்த ஆனந்த உரையாடலுக்கு இடையூறு ஏற்படலாம் என்று தொலைவில் இருந்தபடி அலைபேசி கேமராவில் கிளிக் செய்து கொண்டேன்.

மகிழ்ச்சியே நீ எங்கிருக்கிறாய்?. எப்போது, எப்படி வருவாய்?

நம் மனதிற்குள் இருக்கும் மகிழ்ச்சி, வெளியே துள்ளிக்குதிக்க, இன்னொரு மகிழ்ச்சி, நம் இதயத்தை கிள்ள வேண்டியதிருக்கிறது.
அன்பும், மகிழ்ச்சியும் இந்த உலகத்தில் எப்போதும் நிறைந்திருக்கட்டும். அதில் மனம் மலர்ந்திருக்கட்டும்.

மறுநாள்;

‘‘அந்த நர்சுக்கு ஏதாவது நூல் பரிசாக கொடுக்கலாம்மா. கேட்டு சொல்லுங்கம்மா…’’

‘‘கேட்டேன்டா, அந்த பெண், பைபிள் தவிர வேற எதுவும் படிக்க மாட்டாங்களாம்…’’
[11/16, 06:33] Sekarreporter 1: Super sir

You may also like...