
பி.எச்.பாண்டியன் மறைவு!
வைகோ இரங்கல்
தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் வழக்கறிஞர் அன்புச் சகோதரர் பி.எச்.பாண்டியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த வழக்கறிஞர், சட்டப் பேரவைத் தலைவராக இருந்து அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.
அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து புன்முறுவல் தவழும் முகத்துடன் அனைவரிடமும் பேசிப் பழகும் பண்பாளர்.
என்னிடத்தில் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். நாடாளுமன்ற மக்கள் அவையில் மிகச் சிறப்பாக அவர் பணியாற்றினார்.
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். இப்படி திடீரென இயற்கை எய்தியது அறிந்து மிக மிக வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
04.01.2020
[1/4, 12:00] Sekarreporter: .
