3/22, 22:14] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1638561027657695232?t=nALbC-I9rdtikGkYGyGdeg&s=08 [3/22, 22:15] sekarreporter1: [3/22, 21:47] Inbadura Former i Mla: *அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தலுக்கும் தடை விதிக்க கோரிய ஓபிஎஸ் வழக்கு!−தீர்ப்புக்காக ஒத்திவைப்பு!* Inbadurai

[3/22, 22:14] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1638561027657695232?t=nALbC-I9rdtikGkYGyGdeg&s=08
[3/22, 22:15] sekarreporter1: [3/22, 21:47] Inbadura Former i Mla: *அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தலுக்கும் தடை விதிக்க கோரிய ஓபிஎஸ் வழக்கு!−தீர்ப்புக்காக ஒத்திவைப்பு!*

Inbadurai

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வெளியானதும் பொதுக்குழு செல்லும் ஆனால் தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் பொது வெளியில் கூறி வந்தனர்.

இதற்கிடையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இவ் வழக்கு கடந்த வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேலும் ஒரு புதிய அவசர வழக்கு ஒன்றை கடந்த சனிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ் வழக்கின் விசாரணை விடுமுறை நாளான கடந்த ஞாயிறு அன்று நீதியரசர் குமரேஷ்பாபு முன்னிலையில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்ததுடன் வழக்கை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றையதினம் முழுவதுமாக வழக்கை விசாரித்துமுடித்து வரும் 24 ம் தேதி தீர்ப்பு வழங்குவதாகவும் அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இ்ன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடும்போது:−

ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவில்லை.
எனவே பொதுச்செயலாளர் தேர்தலே சட்டப்படி ஏற்புடையது அல்ல!

ஓபிஎஸ் நீக்கம் தொடர்பான தீர்மானத்துக்கு அஜென்டா இல்லை!
முன்மொழிபவர் இல்லை!
இது சட்டத்தால் ஏற்கத்தக்கது அல்ல!

பொதுச்செயலாளர் பதவி அம்மா வகித்த புனிதமான பதவி என்பதால் அப் பதவியில் வேறு எவரையும் ஏற்க முடியாது!

பொதுக்குழுவுக்கு எவரையும் நீக்க அதிகாரமில்லை!
ஐந்தில் ஒரு பகுதியினர் கேட்டுக்கொண்டால் பொதுக்குழுவை கூட்டலாம்தான். ஆனால் அந்த கோரிக்கையை அவர்கள் ஒருங்கிணைப்பாளரிடம்தான் அளிக்கவேண்டும்!

அடிமட்ட தொண்டர்கள் எவரும் போட்டியிடும் வகையில் எளியதாக இருந்த விதிகளை திருத்தி கடுமையாக்கியுள்ளனர். இந்த விதிகளை தளர்த்தினால் ஓபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார். என வாதிட்டனர்.

இதையடுத்து அதிமுக தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன் விஜயநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

1.65 கோடி தொண்டர்களின் விருப்பபடி தேர்தல் நடக்கிறது. ஒரு சதவீத ஆதரவு கூட எதிர்தரப்பினருக்கு இல்லை.

ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சி தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக நீதிமன்றங்கள் தலையிட முடியாது!

ஒற்றை தலைமை என்பதே தொண்டர்களின் விருப்பம். அதுதான் பொதுக்குழுவின் முடிவு.

உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் ஒரு அரசியல்கட்சியின் உள்விவகாரங்களில் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என தெளிவாக கூறியுள்ளது.

ஓபிஎஸ் வாதியாகவும் பிரதிவாதியாகவும் உள்ள விந்தை வழக்கு இது!

நான் இல்லாவிட்டால் கட்சி இயங்காது எனது பங்களிப்பு இல்லாமல் கட்சி செயல்பட இயலாது என ஓபிஎஸ் வாதிடுவது அவரது நலனுக்காகவா? கட்சி நலனுக்காகவா?

விளக்கம் கேட்காமல் நீக்க முடியாது என்றால்
விளக்கம் கேட்காமல்தானே தனது சொந்த தம்பியை ஓபிஎஸ் நீக்கியது எப்படி?

பொதுக்குழுவில் பலத்தை காட்டாமல் நீதிமன்றங்களில் விதிகளை காட்டி வாதாடுவதால் என்ன பலன்?

கட்சி விவகாரங்களில் பொதுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது.இதை ஏற்பவர்களே உறுப்பினராக இருக்கமுடியும் என்பதே அதிமுக அடிப்படை விதி.
பொதுக்குழுவே உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு.
கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பினர் நொறுக்கியதை பார்த்துவிட்டுதான் பொதுக்குழு சிறப்பு தீர்மானம் மூலம் அவர்களை நீக்கியது!

1.12.21 நடந்த செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதே தீர்மானத்தின் முக்கிய அம்சம்.
ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாக மட்டும் ஆகவில்லை! அவை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

ஓபிஎஸ்ஸை பொதுக்குழு நீக்கும் அஜென்டா இல்லை முன் மொழிபவர் இல்லைஎன கூற முடியாது.
அவசர நடவடிக்கை தேவைப்படும்போது பொதுக்குழுவுகக்கு அந்த அதிகாரம் உள்ளது.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் வழக்கு தீர்ப்பு இவ்வழக்கிற்கும் பொருந்தும்.
ஜுலை 11 பொதுக்குழு சட்டப்படியானது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால் தீர்மானங்களும் சட்டபடியானதே!

இவ்வாறு வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு நீதியரசர் குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கை ஒத்திவைத்தார்.

*−ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்
[3/22, 22:14] sekarreporter1: 🌹

You may also like...