Madras high court orders march 12 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச். 12

[3/12, 13:32] Sekarreporter: தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என மார்ச் 15ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கோரிய உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் வந்ததாக தெரிவித்தார்.

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருந்த சேகர்குமார் நீரஜ்ஜை பணிமாற்றம் செய்தால், வனக்குற்றங்கள் தொடரான பல வழக்குகளின் விசாரணை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்ட போது, சேகர்குமார் நீரஜ் பணிமாற்ற திட்டம் உள்ளதா என்பது தனக்கு தெரியாது எனவும், நாக்பூரில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய அவர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தற்போது வீட்டு தனிமையில் உள்ளதாக விளக்கமளித்தார்.

இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என்பது குறித்து மார்ச் 15ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
[3/12, 13:50] Sekarreporter: மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டுமென தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் (ராஜலட்சுமி) பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்ந்தபோது, கல்விக் கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியின் கல்வி கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதாலும் அரசின் உதவித் தொகையும் கல்லூரிக்கு நேரடியாக செலுத்தப்பட்ட நிலையிலும், தன்னிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

படிப்பை முடித்த பின்பு சில ஆண்டுகள் வங்கியில் பெற்ற கல்வி கடனை செலுத்தி வந்து நிலையில், மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் கல்லூரியை நாடியபோது ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணத்தில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்ததாகவும், பொறியியல் கல்லூரி கல்வி கட்டணத்தை வசூலிப்பதை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளபோதும், அதனை பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்த ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி உயர் கல்விதுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் வசூலித்த கூடுதல் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளருக்கும், மனுதாரரிடம் இருந்து வசூலித்த கூடுதல் கல்வி கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
[3/12, 16:31] Sekarreporter: லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

பின்னர், இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ள பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, டிபாசிட் ரசீதை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தி, விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[3/12, 16:31] Sekarreporter: ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என, 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த சுற்றறிக்கை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதலில் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், போக்குவரத்து ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசின் உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசாணை பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் , அப்போது கொரோனா இல்லாத நிலையில் தற்போதைய சூழலை சாதகமாக்கி மனுத்தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது.

அரசாணையை அமல்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவர்களது மனுவில், 2011ஆம் ஆண்டு சுற்றறிக்கையை எதிர்த்து தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஆனால் இப்போதுதான் வாகனங்களை மாற்ற நிர்பந்திக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பயிற்சி பள்ளிகள் இயங்கவில்லை எனவும், வாகனங்களை மாற்றும்படி வற்புறுபுத்தக்கூடாது என உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[3/12, 19:29] Sekarreporter: தமிழகம் முழுவதும் இன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும், மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.

இதில், 334 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து 545 ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 63 ஆயிரத்து 348 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 251 வழக்குகளும் அடங்கும்.

இதில், 2 ஆயிரத்து 4 செக் மோசடி வழக்குகளில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 49 கோடியே 97 லட்சத்து 23 ஆயிரத்து 381 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 144 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 246 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 ஆயிரத்து 301 சிவில் வழக்குகளில் 33 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 130 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலாளர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 106 குடும்ப நல வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் பிரச்னை தொடர்பான 20 வழக்குகளில் 71 லட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[3/11, 10:37] Sekarreporter: இரண்டு பெண் ஆசிரியைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். https://sekarreporter.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa/
[3/11, 10:37] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502148955899006979?t=liqVU40K-xfPJnb2T34-4A&s=08
[3/11, 12:55] Sekarreporter: https://youtu.be/CW1_Jk3TNMo
[3/11, 12:56] Sekarreporter: https://youtu.be/CW1_Jk3TNMo
[3/11, 13:57] Sekarreporter: THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation Employees Union (Regn No. 3905) Rep by its President C.Udayashankar THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation Employees Union (Regn No. 3905) Rep by its President C.Udayashankar https://sekarreporter.com/the-honourable-mr-justice-v-parthiban-w-p-no-25568-of-2021-air-corporation-employees-union-regn-no-3905-rep-by-its-president-c-udayashankar-the-honourable-mr-justice-v-parthiban-w-p-no-25568/
[3/11, 14:00] Sekarreporter: [3/11, 13:59] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502199924556918784?t=5kwp_INncuqaPvC6CY-tTQ&s=08
[3/11, 13:59] Sekarreporter: Justice V Parthiban of Madras HC
dismisses a case filed last year by a trade union representing over 5,000 employees of Air India to restrain the Centre from disinvesting the air carrier without assuring their service conditions. https://t.co/qVHBaguStP
[3/11, 14:00] Sekarreporter: [3/11, 13:59] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502199782252507138?t=0-hNEhvLojINiyvu85lYLQ&s=08
[3/11, 13:59] Sekarreporter: THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation Employees Union (Regn No. 3905) Rep by its President C.Udayashankar THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation https://t.co/6SKzYEjyQd https://t.co/DPycFdJIvi
[3/11, 16:56] Sekarreporter: [3/11, 16:52] Ranjan MHC adv: முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் க.ஞானப்பிரகாசம் அவர்களின் துணைவியார் சுசிலா அம்மையார் அவர்கள் (வயது 70 )இன்று 11.03.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை 12.03.2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.
நெ. 5 சன்னதி தெரு, பூவிருந்தவல்லி.
[3/11, 16:55] Sekarreporter: .
[3/11, 18:16] Sekarreporter: Former minister jayakumar bail order copy CORAM THE HONOURABLE MR.JUSTICE A.D.JAGADISH CHANDIRA Crl.O.P.No.5467 of 2022 and Crl.M.P.No.3189 of 2022. For Petitioner : Mr.Sanjay R.Hegde, Senior Counsel Mr.A.Natarajan, Senior Counsel for M/s.I.S.Inbadurai For Respondent : Mr.A.Gokulakrishnan Additional Public Prosecutor For intervenor : Mr.P.Anandan O R D E R https://sekarreporter.com/former-minister-jayakumar-bail-order-copy-coram-the-honourable-mr-justice-a-d-jagadish-chandira-crl-o-p-no-5467-of-2022-and-crl-m-p-no-3189-of-2022-for-petitioner-mr-sanjay-r-hegde-se/
[3/11, 20:31] Sekarreporter: https://youtu.be/XgONZ_aVG4I
[3/12, 06:43] Sekarreporter: the impugned Judgments will have to be set aside. Accordingly, the appeal is allowed. The conviction of the appellant for the offences punishable under Sections 7 and 13(1)(d) read with Section 13(2) of the PC Act is set aside and the appellant is acquitted of the charges framed against her. https://sekarreporter.com/the-impugned-judgments-will-have-to-be-set-aside-accordingly-the-appeal-is-allowed-the-conviction-of-the-appellant-for-the-offences-punishable-under-sections-7-and-131d-read-with-section-132/
[3/12, 06:43] Sekarreporter: Justice Senthilkumar Ramamoorthy has held that the consecutive third execution petition filed by Award Holder, Pueblo Holdings Limited, seeking the enforcement of the decree against UAE based Award Debtor, Emirates Trading Agency LLC, by attaching the assets held ostensibly by third parties in the prominently Chennai based ETA Group is maintainable. https://sekarreporter.com/justice-senthilkumar-ramamoorthy-has-held-that-the-consecutive-third-execution-petition-filed-by-award-holder-pueblo-holdings-limited-seeking-the-enforcement-of-the-decree-against-uae-based-award-de/
[3/12, 07:26] Sekarreporter: Madras high court orders march 11. ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 11 https://sekarreporter.com/madras-high-court-orders-march-11-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/
[3/12, 07:26] Sekarreporter: https://youtu.be/LuEJEm2KmBo
[3/12, 07:28] Sekarreporter: https://youtu.be/chowXHRtmhE
[3/12, 08:03] Sekarreporter: https://youtu.be/uUl-oJW84ts
[3/12, 10:55] Sekarreporter: [3/12, 10:54] Sekarreporter: https://youtube.com/shorts/gWsArC0Rc1U?feature=share
[3/12, 10:54] Sekarreporter: https://youtu.be/CAL7OCdb8a0
[3/12, 10:54] Sekarreporter: Judges function
[3/12, 13:33] Sekarreporter: https://youtu.be/pGeGKmWnKC0
[3/12, 13:33] Sekarreporter: https://youtu.be/zTxqNoGcqlQ
[3/12, 14:50] Sekarreporter: https://youtu.be/zD1vQMsrJMQ
[3/12, 16:36] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502601623029182466?t=wDVvCLFbJfcYAMfyZiBZlA&s=08
[3/12, 16:36] Sekarreporter: Justice V Parthiban’s flight to Judicial Glory Narasimhan Vijayaraghavan) Judge: V Parthiban. Petitioner: Ms. R Vaigai. Air India: Mr. N G R Prasad. Well, those in the know of things know. Mr. Prasad was senior to both R Vaigai and Parthiban. Prasad, Vaigai and Parthiban rarely https://sekarreporter.com/justice-v-parthibans-flight-to-judicial-glory-narasimhan-vijayaraghavan-judge-v-parthiban-petitioner-ms-r-vaigai-air-india-mr-n-g-r-prasad-well-those-in-the/
[3/12, 16:46] Sekarreporter: https://youtu.be/Nr3pIR18FL4
[3/12, 16:46] Sekarreporter: https://youtu.be/Jkw4IxWWstQ
[3/12, 17:04] Sekarreporter: Enginering college fees case full order of THE HONOURABLE MR. JUSTICE M.DHANDAPANI W.P. NO. 34400 OF 2019 C.Ashok Kumar .. Petitioner – Vs – 1. The Registrar Anna University, https://sekarreporter.com/enginering-college-fees-case-full-order-of-the-honourable-mr-justice-m-dhandapani-w-p-no-34400-of-2019-c-ashok-kumar-petitioner-vs-1-the-registrar-anna-university/
[3/12, 17:07] Sekarreporter: [3/12, 14:50] Sekarreporter: https://youtu.be/zD1vQMsrJMQ
[3/12, 17:06] Sekarreporter: [3/12, 15:17] Adv Suryaprakasam APS: Heard the speech of justice Bharathidasan. He is known for his hearty laugh during his time of practice. On seeing friends he first used to laugh and then only spk to them. I always used to admire this quality. After a very long time I see this rare quality of justice Bharathi dasan while addressing this book realease function
[3/12, 17:06] Sekarreporter: 🍁🍁
[3/12, 17:24] Sekarreporter: https://youtu.be/pGeGKmWnKC0 part 1 speech of mahadevan
[3/12, 18:41] Sekarreporter: [3/12, 18:27] Sekarreporter: https://youtu.be/NXojQDlPtcc
[3/12, 18:30] Sekarreporter: Madras high court judges and Senior advts singaravelan, prabakaran sir chairman amalraj raj and masilamani senior adv former aag sets moorthy MBA advts ilamvaluthi, kokilavani , madurai advts participated tks for all judges and advocates
[3/12, 20:23] Sekarreporter: TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY (TNSLSA) HIGH COURT CAMPUS, CHENNAI- 600 104 PRESS RELEASE The Hon’ble Mr. Justice Uday Umesh Lalit, Senior most Judge of Supreme Court of India/ Hon’ble Executive Chairman of National Legal Services https://sekarreporter.com/tamil-nadu-state-legal-services-authority-tnslsa-high-court-campus-chennai-600-104-press-release-the-honble-mr-justice-uday-umesh-lalit-senior-most-judge-of-supreme-court-of-india-h/

You may also like...