7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் – மத்திய அரசு வழக்கறிஞருக்கு அமைச்சர் கண்டனம்

தமிழ்நாடு
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் – மத்திய அரசு வழக்கறிஞருக்கு அமைச்சர் கண்டனம்
Feb 22, 2020
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இயற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்ததற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தனது வரம்பை மீறி மத்திய அரசு வழக்கறிஞர் பேசியிருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

You may also like...