SEKAR REPORTER

70 வயது ஆகிவிட்டது, மூத்த குடிமகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் தொடர்ந்து வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்..

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

70 வயது ஆகிவிட்டது, மூத்த குடிமகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் தொடர்ந்து வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்..

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில்
நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து, விலக்கு அளிக்க கோரி
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,
தனக்கு 70 வயது ஆகிவிட்டது என்றும்,மூத்த குடிமகன் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ,இப்போது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் , தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தேன் என்றும், நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டவன் என்று தெரிவித்துள்ளார்.
உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும்,
வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமோ, அல்லது நீடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை என்றும் எனவே நேரில் ஆஜராவதிலிருந்து இருந்து விலக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version