Acj தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக, 1914ம் ஆண்டு பழைய சட்டத்துக்கு பதில், புதிய சட்டம் இயற்றப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக, 1914ம் ஆண்டு பழைய சட்டத்துக்கு பதில், புதிய சட்டம் இயற்றப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பழமையான 1914ம் ஆண்டு சட்டப்படி தேர்தல் நடத்தப்படுவதால், சட்டத்தில் மூன்று மாதங்களில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அதுவரை தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பிலும், தற்போதைய நிர்வாகிகள் சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி 1914ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், இதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார்.

இதை ஏற்று புதிய சட்டத்தை இறுதி செய்ய அரசுக்கு மூன்று மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை தற்போதைய நிர்வாகிகளே நீடிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

You may also like...