SEKAR REPORTER

acj bench temple case

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இரு கோயில்களை அப்புறப்படுத்தக்கோரிய மனு மீது எட்டு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாபரமேஸ்வரி விநாயகர் கோயில் மற்றும் அருள்மிகு துர்கை அம்மன் கோயில் ஆகியவ இரு கோயில்களும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுவதோடு மட்டுமின்றி அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறியுள்ளார்.

இரு கோயில்களையும் அகற்றக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனு அளித்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனது மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததது. மனு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ். ஆஜராகி வாதிட்டார்.

இதனையடுத்து, மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் நடவடிக்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version