SEKAR REPORTER

adv k balu reply notice

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், தங்களுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளதாகக் கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்த நோட்டீசுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அனுப்பிய பதில் நோட்டீசில், விஷச் சாராய மரண சம்பவத்துக்குப் பின் முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு பதிலளிக்க அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை எனவும் நடந்த சம்பவத்தை அடிப்படையில் தெரிவித்த கருத்துக்களில் எந்த அவதூறும் இல்லை எனவும், சமூகப் பிரச்சினைகளை பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவித்ததாகவும், தமிழக மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குரல் எழுப்பி வரும் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசை திரும்ப பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என அந்த பதில் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version