Cat member swaminathan bench order /transfer stayed/பாலியல் புகார் அளித்த பெண் வன அதிகாரியை பணியிட மாற்றம் செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொல்லை அளித்த தலைமை வனப்பாதுகாவலர் பணியாற்றும் இடத்திற்கு அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் வன அதிகாரியை பணியிட மாற்றம் செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎஃப்எஸ் முடித்து புதுச்சேரி மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக இருக்கும் வஞ்சுல வள்ளி சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 2020ம் ஆண்டு புதுச்சேரி வனபாதுகாவலராக இருந்த ஐஎஃப்எஸ் அதிகாரி டாக்டர் தினேஷ் கண்ணன், தனக்கு பணி ரீதியாக பல்வேறு இன்னல்களை கொடுத்தோடு, பாலியல் ரீதியாகவும் தொல்லையும் அளித்தாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தினேஷ் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி மாதிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கடந்த 2020 ம் ஆண்டு டாக்டர் தினேஷ் கண்ணனுக்கு அந்தமான், நிக்கோபார் வனப்பகுதியின் தலைமை வனப்பாதுகாவலராக பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் பதவி உயர்வும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தினேஷ் கண்ணன் தலைமை வனப்பாதுகாவலராக பணியாற்றி வரும் அந்தமான், நிக்கோபார் வனப்பகுதிக்கு தன்னை பணியிட மாற்றம் செய்திருப்பதாக மத்திய அரசின் வனத்துறை செயலாளர் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவை அனுப்பியிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து, தினேஷ் கண்ணன் மீதான பாலியல் வழக்கு முடியும் வரை புதுச்சேரியில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் சுவாமிநாதன்/ த்ததோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஐஎஃப்எஸ் அதிகாரி வஞ்சுல வள்ளி தரப்பில், விசாகா கமிட்டியின் விதிகளின் படி பாலியல் குற்றம் சாட்டுக்கு உள்ளான அதிகாரி பணியாற்றும் இடத்திற்கு புகார் அளித்த நபர்களை பணியிட மாற்றம் செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த தீர்ப்பாய உறுப்பினர்கள், ஐஎஃப்எஸ் அதிகாரி வஞ்சுல வள்ளியை புதுச்சேரி வனத்துறையில் இருந்து அந்தமான் நிக்கோபார் வனத்துறை அதிகாரியாக பணியிட மாற்றம் செய்த மத்திய வனத்துறை செயலாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க.உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 30 ம் தேதி தள்ளி வைத்தனர்.