SEKAR REPORTER

cv shanmugam case mhc. Order notice

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை ஒட்டி, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கடை வீதியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக முதல்வர் சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் தற்போதைய அரசின் தோல்விகளை தொடர்ந்து விமர்சித்து வருவதால், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் தான் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் பேசும் பேச்சுக்களின் அடிப்படையில் தனக்கு எதிராக தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பொதுக்கூட்ட பேச்சு தொடர்பாக ஏற்கனவே குற்ற வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது விமர்சனம் அவதூறு அல்ல என்பதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் எனவும், விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version