SEKAR REPORTER

Hcp case smsj bench order

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

பல்லடத்தில் நடந்த கொலையில் தனது மகன் தங்கராஜ் என்பவரை பிடிப்பதற்காக காவல்துறை அவருடைய மனைவியை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள் என்றும் இதன் தொடர்ச்சியாக தங்கராஜ் பல்லடத்தில் நடந்த கொலை வழக்கில் சரண்டர் ஆனார் என்றும் தற்போது அவரை காவல்துறையினர் கஸ்டடி எடுத்து கை காலை உடைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது என்றும் இரண்டு நாளுக்கு முன் அவரை கசடி எடுத்தார்கள் என்றும் அப்போது அவருடைய காலை உடைத்திருப்பதாகவும் தங்கராஜின் தாயார் ராக்கு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து 35-வது நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி சிவஞானம் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறையினர் இதுபோல என்கவுண்டர் செய்கிறார்கள் கஸ்டடியில் கை காலை உடைக்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பில் வாதிட்டபோது மனுதாரரின் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது அவருக்கு காயம் இருந்தால் அது தொடர்பாக நீதித்துறை நடுவர் பதிவு செய்து கொடுக்கும் அறிக்கையை வரும் 14ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார் . மேலும் தங்கராஜ் என் மனைவி இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தாரா என்பது தொடர்பாகவும் விசாரிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார் . வழக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version