SEKAR REPORTER

Judge baratha chakraverthy /உண்மையில் லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டால், அது கேன்சரை மீண்டும் உடலில் செலுத்துவதற்கு சமம் எனத் தெரிவித்துள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர், சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யும் வழக்குகளில், லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார் என்பவர், தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை வழக்கில் சேர்க்க மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்சேபத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அரசு ஊழியருக்கு எதிராக பொய் லஞ்ச வழக்குப்பதிவு செய்திருந்தால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும். ஆனால், உண்மையில் லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டால், அது கேன்சரை மீண்டும் உடலில் செலுத்துவதற்கு சமம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க, சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் தன்மை, குற்ற வழக்கின் நிலை ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்குகளில் குற்ற வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடும் வகையில், புலன் விசாரணை அதிகாரியை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version