SEKAR REPORTER

Judge jayachandren senior B kumar adv மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக,
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version