Life history Sekarreporter1: [6/4, 19:05] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1400808060314996740?s=1006 [6/4, 19:05] Sekarreporter1: அசன் முகமது ஜின்னா அரசு தலைமை வழக்கறிஞராக நியமனம்- தலைமைச் செயலர் உத்தரவு [6/4, 19:05] Sekarreporter1: வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா M.A., M.L., திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை கிராமத்தில் 1977ல் வழக்கறிஞர் திரு.

[6/4, 19:05] Sekarreporter1: [6/4, 19:05] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1400808060314996740?s=1006
[6/4, 19:05] Sekarreporter1: அசன் முகமது ஜின்னா அரசு தலைமை வழக்கறிஞராக நியமனம்- தலைமைச் செயலர் உத்தரவு
[6/4, 19:05] Sekarreporter1: வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா M.A., M.L.,

திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை கிராமத்தில் 1977ல் வழக்கறிஞர் திரு. அசன் முகமது , திருமதி. தாஜூனிஷா அவர்களின் ஓரே மகனாய் பிறந்தவர் திரு.அசன் முகமது ஜின்னா. இவர், தனது பள்ளிப் படிப்பை நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியிலும், கலைஞர் படித்த திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்தார். அதன் பின், சட்டப்படிப்பினை சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்றார். சட்டப் படிப்பை நிறைவு செய்து, 1999ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பின்னர், சட்டப் படிப்பில் முதுகலை படிப்பை (எம்.எல்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.

வழக்கறிஞரான இவரின் தந்தை திரு. அசன் முகமது அவர்கள் தஞ்சை கிழக்கு மாவட்டம், நாகை காயிதே மில்லத் மாவட்டம் (நாகப்பட்டினம் மாவட்டம்) ஆகியவற்றில் பப்ளிக் பிராசிக்யூட்டர்- அரசு ப்ளீடர் ஆகிய பொறுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். மேலும் நெருக்கடி நிலைக் காலத்தில் கலைஞரின் முரசொலி நாளேட்டில் துணை ஆசிரியராக இருந்து, துணிவுடன் பணியாற்றியவர். தனது இலக்கிய ஆர்வத்தினை கவிதை-கட்டுரைகளாய் இயற்றியவர். அன்னாரின் தடம் பற்றி, அவர்களிடமே ஜூனியராக 1999-ல் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று, அரசு தரப்பில் பல்வேறு கொலை வழக்குகளை நடத்தியுள்ளார். ஓராண்டுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னுடைய பணியை தொடர்ந்தார் அசன் முகமது ஜின்னா.

ஆரம்பம் முதலே, பொது நலன் வழக்குகளில் முனைப்பு காட்டி வாதாடினார். பள்ளிகளில் மாணவர்களுக்கேற்ற தரமான-வசதியான கட்டடங்கள் இல்லை என்பது தொடர்பான வழக்குகளில் நேர்நின்று உரிய உத்தரவுகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

2001ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை சிலையில் கண்ணகி சிலை பீடம் இடிக்கப்பட்டு, சிலை அகற்றப்பட்டது தொடர்பாக பொதுநல வழக்குத் தொடர்ந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்பது அவரது பொது நல மனு. அதன் மீதான விசாரணையில், “வழக்கு முடியும்வரை கண்ணகி சிலையை அரசு பாதுப்பாக வைக்க வேண்டும்” என்ற இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன்படி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பழைய பொருட்களுக்கான அறையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை, 2006ல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்ததும் மீண்டும் மெரினா கடற்கரையில் அதே இடத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழாவில், அசன் முகமது ஜின்னாவின் சட்டப் பணியைக் குறிப்பட்டுப் பாராட்டி உரையாற்றினார் முதல்வர் கலைஞர்.

2004ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இளம் தலைவர்கள் குழு ஒன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு நல்லுறவுப் பயணமாக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அசன் முகமது ஜின்னா இடம் பெற்றார். தமிழ்நாட்டில் சார்பில் இளம் தலைவராக முதன் முதலில் இத்தகைய குழுவில் பங்கேற்றவர் அவர்தான். அமெரிக்க சுதந்திர தினவிழாவில் அந்நாட்டின் அன்றைய வெளியுறவுச் செயலாளர் காலின் பவல் அவர்களுடன் கலந்து கொண்டார். இந்தியாவை ஐ.நா.அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்பதை காலின் பவல் அவர்களிடம் வலியுறுத்திப் பேசினார்.

2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக (கிரிமினல் வழக்குகள்) நியமிக்கப்பட்டார். முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் ஆஜரானார். அதன்பிறகு, கூடுதல் அரசு (குற்றத்துறை) வழக்கறிஞராக பொறுப்பு வகித்தார். கல்லூரி மாணவி சரிகாஷா ஈவ் டீசிங் கொடூரத்திற்குள்ளாகி உயிர்ப்பலியான வழக்கில் திறம்பட வாதிட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தந்தார். இதுபோன்ற பரபரப்பான பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை முன்னின்று நடத்தினார். சரிகாஷா ஈவ் டீசிங் வழக்கு, தமிழகத்தில் ஈவ் டீசிங்கிற்கு எதிரான சட்ட வடிவமைப்பினில் மிக முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, வக்ஃப் போர்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகியவற்றுக்கு ஸ்டான்டிங் கவுன்சிலாக இருந்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் வழக்காடும் முறை-நீதிமன்ற மாண்புக்கு மதிப்பளிக்கும் முறை போன்றவற்றால் நீதியரசர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா.

You may also like...