Madras high court december 23 orders

[12/23, 12:10] Sekarreporter 1: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிட கோரி அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு  நளினி உள்ளிட்ட 11 பேரை  விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளதை  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க ஏதுவாக வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
[12/23, 12:49] Sekarreporter 1: காணொளி காட்சி விசாரணையின் 
போது வழக்கறிஞர் பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அசிங்கமான செயலால் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என  கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது

சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், 
கேமரா ஆனில் இருந்தது தெரியாமல்
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன்
பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டும் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான
வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட

வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு  பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்
.
சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி,
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அடையாளம் காணப்பட்டு,வழக்குப்பதிவு செய்யப்பட்டு
விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தார்.. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ் இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம் என்றும் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என யோசித்ததாக வேதனை தெரிவித்தார்.
[12/23, 12:52] Sekarreporter 1: சமூக வலைதள விமர்சகர் கிஷோர் கே. சுவாமி மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

திமுக தலைவர் கருணாநிதி பற்றி விமர்சனம் செய்ததற்காக, சமூக வலைதள விமர்சகர் கிஷோர் கே. சுவாமி மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார் செய்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கிஷோரை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர் மீதான பழைய வழக்குகளிலும் கிஷோரை கைது செய்த போலீசார், அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
அந்த வகையில், அவர் மீதான 7 வழக்குகளில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதையடுத்து, கிஷோர் கே.சுவாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிசனர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது அப்பா கிருஷ்ணசுவாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து.கிஷோர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கிஷோர் மீதான 7 வழக்குகளில் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ளார். எனவே, அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியே வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[12/23, 12:59] Sekarreporter 1: விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ரம்யாவிற்கு எதிரான வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் நிலையத்தினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை ரூ. 45 லட்சத்தை செலுத்தியதாக போலி ஆவணங்களை காட்டி விட்டு, பண மோசடி செய்ததாக மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகார்

2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், இறுதி அறிக்கை ஏதும் இதுவரை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, மேலாளர் ஹரிகிருஷ்ணன் வழக்கு
[12/23, 13:17] Sekarreporter 1: உரிய உரிமங்கள் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும், விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா என தெரிவிக்காததில் இருந்து, இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்றே கருத வேண்டியிருப்பதாக கூறி, விதிகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.
[12/23, 14:49] Sekarreporter 1: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவின்படி, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதற்காக ஆணைய அறிக்கை, ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 3 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
[12/23, 17:07] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென உத்தரவிடும்படி தமிழக டிஜிபி-க்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மருதசஞ்ஜீவினி என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி சி.பி.கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும், ஆனால் சோதனை என்ற அடிப்படையிலும், புகார்கள் வருவதாகவும் கூறி அன்றாட செயல்பாடுகளில் காவல்துறை அடிக்கடி தலையிடுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்பா, மசாஜ் சென்டர் ஆகியவற்றுக்கு எதிராக புகார்கள் வரும்போது மட்டுமே ஆய்வு செய்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதால் அதை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென தமிழக டிஜிபி-க்கு நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாவோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளை பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
[12/23, 17:30] Sekarreporter 1: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில்,
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் அயலான் படத்தை 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது

இந்நிலையில் டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர்
அயலான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த நிலையில்
தற்போது வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

தற்போது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து அயலான் படத்தை தயாரிக்கும் நிலையில், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடவோ,விநியோகம் செய்யவோ தடை விதிக்க கோரியுள்ளார்

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,
அயலான் படத்தை வெளியிட 2022, ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்

மனுதாரர் தரப்போடு உள்ள பிரச்சனையை முடித்து கொள்வதும் மேற்கொண்டு இந்த வழக்கில் பதிலளித்து வழக்கை தொடர்வதும் படக்குழுவின் விருப்பம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்
[12/23, 18:05] Sekarreporter 1: நடிகைகளை வைத்து தொழிலதிபரை இரண்டு பைனான்சியர்கள்
ஏமாற்றி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நடிகைகள்,முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் தி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜா என்ற தொழிலதிபர் பிறந்தநாள் கொண்டாடினார்.அப்போது தொழிலதிபர் ராஜாவுடன் நடிகைகளை சேர்த்து வைத்து வீடியோ எடுத்து, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக
கரூரைச் சேர்ந்த பைனான்சியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் மீது
பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மோசடி மற்றும் பணம் பறித்தல் தொடர்பாக ஒரு வழக்கும், பெண்களை வைத்து தவறான செயலில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வழக்கும் பாண்டிபஜார் போலீசார் பதிவு செய்துள்ளனர்..
இந்த நிலையில் பைனான்ஸ் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தாங்கள் அனைவருமே நண்பர்கள் என்றும் நடிகைகளுடன் வீடியோ எடுத்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டதாகவும், அப்படி ஒரு வீடியோக்களே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது .எனவே தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் அளித்த தொழிலதிபர் ராஜா தரப்பிலும் தங்களுக்குள் எந்த பிரச்சினை இல்லை என்றும்,தவறான தகவலால் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது ..அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இரண்டு பைனான்சியர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[12/23, 18:13] Sekarreporter 1: கட்சியில் சேரும் நாளில் இருந்த சொத்து விவரங்களையும், கட்சியில் சேர்ந்த நோக்கத்தையும் வேட்பு மனுவில் தெரிவி்க்கும் வகையில் தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல்களில் ஊழல், கருப்பு பணத்தின் பங்கு இல்லாமல், ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டுவர கோரி தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்டத்துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 75 ஏ படி, வேட்பாளர் வேட்புமனுவில், அவர் அந்த கட்சியில் சேரும்போது அவருடைய சொத்து விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பொருளாதார நிலை ஆகியவை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தேர்தல் விதிகளின்படி, அடிப்படையில் வேட்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், வங்கி இருப்பு மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள கடன் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். தவறான விவரங்களை வேட்புமனுவில் தெரிவித்து இருந்தால் 6 மாத சிறையுடன் அபராதம் விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. வேட்பாளர்கள் போதிய தகவல்களை தராவிட்டாலோ அல்லது தவறான தகவல்களைத் தந்தாலோ அதை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் செலவுகளை மாநில அரசுகளே ஏற்றுக்கொண்டு தணிக்கை மேற்கொள்ளும்பட்சத்தில் கருப்பு பணம் மற்றும் ஊழலைத் தடுக்க முடியும் எனவும், சாதி அரசியலை தடுக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேட்பாளர் அவரது கட்சியில் சேரும்நாளில் அவரது சொத்துக்கள், நகை, வருமானம் என்ன, தற்போதுள்ள வருமானம், சொத்துக்கள் என்ன என்பதை வேட்பு மனுவில் தெரிவி்க்கும் வகையிலும், எந்த நோக்கத்துக்காக கட்சியில் சேருகிறார் என்பதையும் வேட்புமனுவில் தெரிவிக்கும் வகையில் தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் ஜெ.சத்ய நாாயண பிரசாத் அமர்வு, மனுவுக்கு ஜனவரி 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

You may also like...