Madras high court december 8 order

[12/7, 16:46] Sekarreporter 1: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ரிலையன்ஸ் ரீட்டெய்ல் மற்றும் பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கே.செல்வக்குமாரசாமி மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் 49 இன்ச் அளவிலான ஹெச்.டி. தரத்திலான பிலிப்ஸ் டிவியை கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். ஒரு வாரத்திலேயே டிவி பழுந்தானது குறித்து புகார் அளித்த நிலையில், அதை சரிசெய்தும் மீண்டும் பழுதானதால் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஷோரும், பிலிப்ஸ் டிவி நிறுவனம், சர்விஸ் செய்யும் சென் டெக் நிறுவனம் ஆகியவை எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், மூவரும் சேர்ந்து டிவியின் விலை 65 ஆயிரத்து 390 ரூபாய், நேர கிரயம், மன உளைச்சல் ஆகியவற்றிற்கான இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய், வழக்கு செலவு தொகை 10 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 390 ரூபாயை இரண்டு மாதங்களில் புகார்தாரருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
[12/7, 17:52] Sekarreporter 1: தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு தேவைப்படும் புறம்போக்கு நிலத்துக்கு பதில், பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தைக் கொடுத்து, பதிலுக்கு பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரியைச் சேர்ந்த சூர்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழக அரசின் இந்த அரசாணை, அரசு புறம்போக்கு நிலங்கள், சிறிய நீர்நிலைகளை ஆக்கிரமிக்க வழிவகை செய்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் பொது பயன்பாட்டுக்குரியது என்பதால் அவற்றை தனியாருக்கு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பது, நீர்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய், ஓடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும், அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் அடிப்படையில் நில பரிமாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு நிலம் பரிமாற்றம் செய்வது தொடர்பான அரசாணையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[12/7, 18:06] Sekarreporter 1: கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பணபட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேரில் ஆஜராகி, சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 28 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டை மறுப்பதாகவும், முறையாக தேர்தல் கணக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் வழக்கில் கூறப்பட்ட மற்ற குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.

பாண்டியராஜனிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பு குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கின் விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
[12/8, 13:01] Sekarreporter 1: கோவில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோவில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கோவில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் நவம்பர் 4ம் தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர் தனது மனுவில், கோவில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்க கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கடந்த நவம்பர் 4ம் தேதி சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[12/8, 15:33] Sekarreporter 1: வங்கிகளிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக கைதான வழக்கில் சுரானா நிறுவன இயக்குனர் விஜயராஜ் சுரானாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் மொத்தமாக பெற்ற 4000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பும் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் ஜாமின் கோரி சுரானா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான விஜயராஜ் சுரானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்களுடன் தனக்கு தொடர்பில்லை என வாதிட்டார். இயக்குனராக இருந்த மற்ற இரு நிறுவனங்களின் பொறுப்பிலிருந்தும் ஏற்கனவே விலகிவிட்டதால் இந்த வழக்கிற்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதால், ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கியிடம் கடன் பெற்ற மோசடியில் விஜயராஜ் சுரானாவிற்கு தொடர்பிருப்பதாகவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால் தனக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென மனுதாரர் கோர முடியாது என தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜாமின் கோரிய விஜயராஜ் சுரானாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
[12/8, 16:04] Sekarreporter 1: நாட்டில் ஒற்றுமையின்மையையும், காவரத்தையும் தூண்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அளித்த புகார் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் நவம்பர் 6ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் தொகுதி எம்.பி.-யும், விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும், இதன்மூலம் நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடராக விசிக தலைவர் திருமாவளவன் மீது நவம்பர் 6ஆம் தேதியே சென்னையில் உள்ள சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி-யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் அளித்த புகார் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் மதுரை காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

இதையடுத்து மதுரை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் ராமசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/8, 17:44] Sekarreporter 1: வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்ததாக பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பணபட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் 2ஆம் நாளாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பில் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது.

அப்போது அவர், அதிமுகவுக்கு வாக்களித்தால் 5ஜிபி மற்றும் 6ஜிபி இலவச இன்டர்நெட் சேவைகள் மற்றும் 500 ரூபாய்க்கு டாக்டைம் ரீச்சார்ஜ் செய்யப்படும் என அறிவித்தாக கூறப்பட்ட குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுப்பதாக தெரிவித்தார்.

அதேபோல, அதிமுக அட்டைபடம் போட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க முயற்சித்தபோது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து நேரில் ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டும் முற்றிலும் தவறு எனவும், தனக்கு எந்தவொரு சம்மனும் வரவில்லை என தெரிவித்தார்.

பாண்டியராஜனிடம் விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...