Madras high court feb 17th order ஐகோர்ட் 17 பிப் உத்தரவுகள்

[2
[2/17, 11:29] Sekarreporter 1: Sasikala pushpa conditional bail https://sekarreporter.com/sasikala-pushpa-conditional-bail/
[2/17, 11:29] Sekarreporter 1: https://youtu.be/9PDZGZHixVI
[2/17, 11:29] Sekarreporter 1: https://youtu.be/BTU4D05AEnc
[2/17, 15:10] Sekarreporter 1: For all the foregoing reasons, the impugned proceedings passed by the respondent in G.D.C.No.E4/8210/2008 dated 18.09.2017, is quashed. Consequently, there shall be a direction to the respondent to forthwith reinstate the petitioner back in service HONOURABLE MR. JUSTICE M.S. RAMESH W.P.No.28777 of 2017 V.Kumar For Petitioner : Mr.M.Ravi For Respondent : Mrs.Karthikaa Ashok Standing Counsel for Chennai Corporation https://sekarreporter.com/for-all-the-foregoing-reasons-the-impugned-proceedings-passed-by-the-respondent-in-g-d-c-no-e4-8210-2008-dated-18-09-2017-is-quashed-consequently-there-shall-be-a-direction-to-the-respondent-to/
[2/17, 16:49] Sekarreporter 1: TN BJP Advocate Wing Secretary RC Paul Kanagaraj appeared for the 32 ABVP cadres bail before CMM Court, Egmore. Paul Kanagaraj argued that, all the arrested are students, some of them have exams, they come from poor back ground, Court should consider their career, etc. PP pointed out that half of the students have given false names and false addresses. https://sekarreporter.com/tn-bjp-advocate-wing-secretary-rc-paul-kanagaraj-appeared-for-the-32-abvp-cadres-bail-before-cmm-court-egmore-paul-kanagaraj-argued-that-all-the-arrested-are-students-some-of-them-have-exams-the/

/17, 16:54] Sekarreporter 1: சசிகலா புஷ்பாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன்

கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் ராமசாமி அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்….

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகர் வீட்டில், ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் கணவர் ராமசாமி புகார்

தனக்கு எதிரான் பொய் புகாரில் வழக்குப்பதிவு. கணவர் ராமசாமி தான் மிரட்டியுள்ளார் – சசிகலா

15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது எனவும் நிபந்தனை
[2/17, 16:54] Sekarreporter 1: தமிழ்நாட்டிற்கென தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்கை  விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு,  உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த  வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க  விதிகள் உள்ளனவா என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளனவா என தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு விரைவில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை உருவாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
[2/17, 16:54] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல்..

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கு விசாரணை 2 வாரம் தள்ளி வைப்பு.
[2/17, 16:54] Sekarreporter 1: மதுபானத்தை கையாளாத மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் எடுத்துச்செல்லும் மதுபானத்தை அருந்த, கிளப்புகள் உரிமம் பெற வேண்டுமா?????

தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மனமகிழ் மன்றம் என்பது பொது இடம் இல்லை. உள்ளே விற்பனை நடைபெறவில்லை. எனவே உரிமம் வாங்க சட்டப்படி அவசியம் இல்லை – கிளப்

உரிமம் பெற கட்டாயப்படுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு
[2/17, 16:54] Sekarreporter 1: தமிழகத்தில் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன்….

காரணங்களை விளக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கும் வழக்கு

தமிழக நிலப்பரப்பில் 6.92% சதுப்பு நிலங்கள் உள்ளன, பள்ளிக்கரணை மற்றும் கழுவேலி ஆகிய சதுப்பு நிலங்களை தவிர மேலும் 12 இடங்களை சதுப்பு நிலங்களாக அறிவிக்கும் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் விளக்கம்

You may also like...