Madras high court feb 16th order ஐகோர்ட் பிப் 16 உத்தரவுகள்

[2

[2/16, 06:57] Sekarreporter 1: ] Adv Suryaprakasam APS: Watched with shock and disbelief about this member of parliament from Tamilnadu openly criticising the conduct of the Our high court judge while rendering justice in that https://sekarreporter.com/adv-suryaprakasam-aps-watched-with-shock-and-disbelief-about-this-member-of-parliament-from-tamilnadu-openly-criticising-the-conduct-of-the-our-high-court-judge-while-rendering-justice-in-that/
[2/16, 06:57] Sekarreporter 1: ஸ்ரீநிவாச ராகவன் S ஒரு வழக்குரைஞன் சமூகத்திற்கு தன்னால் முடிந்த வரை உதவுதல் ஓர் அறம். பொது வாழ்வில் நேரடியாக இறங்கிப் பணியாற்றும் வழக்குரைஞர்களுக்கு மட்டுமே அந்த வகையான சமூக சேவைக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். https://sekarreporter.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-s-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95/
[2/16, 07:02] Sekarreporter 1: Madras high court feb 25th orders ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 15 https://sekarreporter.com/madras-high-court-feb-25th-orders-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa/
[2/16, 07:08] Sekarreporter 1: [2/16, 07:06] Sekarreporter 1: Send ur legal article ur orders for my website and my sekarreporter app
[2/16, 07:07] Sekarreporter 1: 🌹
[2/16, 09:26] Sekarreporter 1: https://youtu.be/10UCXb4xJ_8
[2/16, 15:17] Sekarreporter 1: Madras high court orders ஐகோர்ட் உத்தரவுகள் till afternoon fen 16 https://sekarreporter.com/madras-high-court-orders-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-till-afternoon-fen-1/
[2/16, 18:26] Sekarreporter 1: https://sekarreporter.com/madras-high-court-feb-16-evening-orders/
[2/16, 20:27] Sekarreporter 1: STATEMENT The Supreme Court Collegium in its meeting held on 16th February, 2022 has approved the proposal for elevation of the following Advocates as Judges in the Madras High Court. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான நிதுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது : https://sekarreporter.com/statement-the-supreme-court-collegium-in-its-meeting-held-on-16th-february-2022-has-approved-the-proposal-for-elevation-of-the-following-advocates-as-judges-in-the-madras-high-court/
[2/16, 20:30] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493963232934912008?t=ljQTaRU77796OjDiboxpDQ&s=08
[2/16, 20:39] Sekarreporter 1: [2/16, 20:38] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493964995326971909?t=OUoSc3k1l_WFKugeVU7A7A&s=08
[2/16, 20:38] Sekarreporter 1: New judge kumaresh babu

/16, 11:38] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக விதிகளை போஸ்டர்கள் ஒட்ட எவருக்கும் அனுமதியளிக்க கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 117வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட அனுமதிக்க கூடாது என மாநகராட்சிக்கும், போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.

தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டக் கூடாது என விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம், காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.
[2/16, 12:41] Sekarreporter 1: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக  தமிழக அரசு 68 கோடி ரூபாய்  டெபாசிட்  தொகையை திரும்ப பெறுவதாகவும்,கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.  மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்த சட்டபூர்வ வாரிசுகான தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி,  கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார்
இந்த தீர்ப்பை எதிர்த்து  ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை  உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு,
தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள்  குறிப்பிட்டு அதிமுக வழக்கை தள்ளுபடி செய்தனர்.இந்த நிலையில சென்னை ஆறுவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும்,கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கில் வரும் 18 ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
 
[2/16, 12:42] Sekarreporter 1: தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதும், கல்லூரிகள் 7 லட்சத்து 50 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், எந்த கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற எந்த அடிப்படை தகவலும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பொதுநல வழக்கு அதிகார வரம்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்புக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை 15 நாட்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்டனர்.
[2/16, 13:20] Sekarreporter 1: வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில்ச் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தை வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கருக்கு மாற்றக் கோரி நகராட்சி தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சோளிங்கர் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்ற கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மனுதாரரோ, நீதிமன்றமோ தீர்மானிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஏற்கனவே வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
[2/16, 15:45] Sekarreporter 1: கருவேலமரங்களை அகற்றும் பணிக்கு மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வேருடன் அவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹு, கிராம மக்கள் கருவேல மரங்களை விறகாக பயன்படுத்துவதாகவும், செங்கற்சூளைகள் போன்ற ஆலைகளும் இதை எரிபொருளாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

கருவேலமரங்களின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர்குழு உறுப்பினர், பசுமைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் இந்த மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், கருவேலமரங்களின் தழைகளை கால்நடைகள் உண்பதாகவும், அதிகளவில் உட்கொண்டால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்றார்.

இதுசம்பந்தமாக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் நியமித்த குழுக்களின் அறிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பசுமைக்காகவும், வாழ்வாதாரம் தருகிறது என்றால் இந்த மரங்களை அகற்ற அரசு ஏன் முடிவெடுத்தது எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, வனப்பகுதியில் இந்த மரங்கள் பிற மரங்களை வளரவிடுவதில்லை எனவும், யானைகள் போன்ற விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடியவில்கை என்றும் பாதிப்பில்லை என கூற முடியாது எனவும் விளக்கினார்.

தொடர்ந்து, நீதிபதிகள், கருவேலமரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், நிலத்துக்கு மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது என்றனர்.

கருவேல மரங்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், உண்மையிலேயே இந்த மரங்களை அகற்றும் நோக்கம் அரசுக்கு உள்ளதா? இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

ராஜஸ்தான் போன்ற மற்ற மாநிலங்கள் என்ன நடைமுறை பின்பற்றுகின்றன என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மற்ற மாநிலங்களில் இல்லாவிட்டால் தமிழகம் முன்மாதிரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்தை கருவேல் மரங்களில்லாத மாநிலமாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இறுதியில், இந்த மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்பு உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிவித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு சொந்த நிதியை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மார்ச் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/16, 17:00] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் காலியிடங்கள் மற்றும் நிரப்புவதற்கான நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் அறங்காவலர்கள் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி கோவிலை நிர்வகிக்கும் நபர்களாக அறநிலையத்துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 97 சதவீத கோவில்கள் அறங்காவலர்கள் இல்லாமல் செயல்படுகின்றன என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறங்காவலர்கள் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்களின் பதவிகாலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பதவிகாலம் முடிந்த 6 மாவட்டங்களில் மீண்டும் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அதிக வருமானம் வரக்கூடிய 314 கோவில்களில் மட்டும்தான் அரசு நியமிக்க வேண்டும் என உத்தரவிடவில்லை என்றும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

15 ஆண்டுகளாக முறையாக நிரப்பப்படாத அறங்காவலர் இடங்களை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளபோது, அந்த பணிகளை முடிக்க சில காலம் காத்திருக்க வேண்டுமென மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

ஆறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எத்தனை கோவில்கள் உள்ளன, எத்தனை கோவில்கள் பரம்பரை அறங்காவலர்களின் கீழ் வரும், அறங்காவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர் காலியிடங்கள் எத்தனை உள்ளன, காலியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் என்ன என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/16, 17:13] Sekarreporter 1: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து பாடல் படிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதியபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிய செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை தள்ளி வைத்தார்.
[2/16, 17:38] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் நேர்முகத்தேர்வை விரைந்து முடித்து பணி ஆணையை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சேட் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம்,
தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்த போது,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர், உறுப்பினர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்து,தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதாகவும்,
அதன்பின் பணி ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,
விரைவில் நேர்முகத் தேர்வை முடித்து,
பணி நியமனம் வழங்கும் பணியை துரிதப்படுத்த
உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்
[2/16, 17:39] Sekarreporter 1: கோவில்களுக்கு, வாரிசுகளை அர்ச்சகர்களாக நியமிப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்ட தமிழக அரசு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்திருந்தது.

இந்த விதிகளை எதிர்த்தும், அர்ச்சகர் பள்ளிகள் நடத்துவதை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. வழக்கில் இன்று வாதங்கள் துவங்கப்பட்டன.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு ஆகமம் உள்ளதாகவும், அர்ச்சகர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அர்ச்சகர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்? பரம்பரை பரம்பரையாக நியமிக்கப்படுகிறார்களா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், குருகுல பயிற்சி பெற்றவர்கள் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் தெரிவித்தார்.

பரம்பரை பரம்பரையாக, வாரிசுகளை அர்ச்சகர்களாக நியமிப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பின், வழக்கில் வாதத்தின் தொடர்ச்சிக்காக விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[2/16, 20:32] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான

என்.மாலா

சுந்தர் மோகன்

கே. குமரேஷ் பாபு

எஸ்.சௌந்தர்

அப்துல் ஹமீத்

ஆர்.ஜான் சத்யன்

ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது
[2/16, 21:11] Sekarreporter 1: ஒரு பெண் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கபட்ட 75 நீதிபதிகள் பதவிகளில் 15 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரூபிப்பதற்காக முயற்சியாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள 6 பேரை நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
[2/17, 06:54] Sekarreporter 1: போலியான பில்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி மோசடி செய்த நபருக்கு, நான்கு ஆண்டு கடுங்கால் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹாரூன் ரஷீது என்பவர், 2014 பிப்ரவரி முதல், நவம்பர் மாதம் வரை, பல்வேறு வங்கிகளில், பல்வேறு பெயர்களில், நடப்பு கணக்கு துவங்கி, 5 கோடியே 41 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்துள்ளார்.

மேலும், உரிய விலை ரசீதுகள் பதிவு செய்யாமல், போலியான பில்கள் வாயிலாக, இறக்குமதி செய்ததாக, 34. கோடிே94 லட்சம் ரூபாய் வரை, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹரூன் ரஷீது மீது, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 2018ல் கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருவேங்கட சீனிவாசன், குற்றம் சாட்டப்பட ஹாரூன் ரஷீது மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

You may also like...