Madras high court march 30 th orders

[3/30, 12:13] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

ஜெயக்குமாரின் மருமகன் இரண்டு வாரத்திற்கு தினசரி மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஜெயக்குமார் மகள் ஜெயப்ப்ரியா இரண்டு வார காலத்திற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மத்திய குற்றப்பிரிவு முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பான விவகாரத்தில்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
[3/30, 12:34] Sekarreporter: எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.

நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனவும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது, அமைச்சரவை தீர்மானத்தை 42 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோருவதாக தெரிவித்தார்.

மேலும், இதேபோல அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில், ஏற்கனவே 20 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் நளினியை தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோத காவல் என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஆளுநருக்கு எதிராக உத்தரவிடும்படி கோர முடியாது எனவும், ஏற்கனவே மூன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை எப்படி ஏற்க முடியும் எனவும் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டி விடுதலை செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் தான் எனவும் தெரிவித்தார்.

பின்னர், முன் கூட்டி விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தை ஒப்பிடும் போது, உயர் நீதிமன்றத்துக்கு குறைந்த அதிகாரமே உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[3/30, 14:28] Sekarreporter: நளினிக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நளினியை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான மனுவையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, இந்தியாவில் எந்த உயர் நீதிமன்றத்திலாவது தண்டனை பெற்ற குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்தற்கான தீர்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தைதான் அணுக முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழகத்தில் பரோல் தொடர்பான விதிகள் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக சிறை விதிகளின்படி விடுப்பு உள்ளதாகவும், அதன்படி கைதிகளுக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டார். ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்ய ஆலோசனைக் குழு உள்ளதாகவும் அந்த குழு தான் நடவடிக்கை எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
[3/30, 15:07] Sekarreporter: மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர்,கடந்த 2004ம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக 2006ம் ஆண்டு வங்கி அதிகாரிகளால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம், கெளரிசங்கருக்கு மீண்டும் பண வழங்க 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வங்கியின் பணியிடை நீக்கம் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, கெளரிசங்கர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகளில் தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மட்டுமே வைக்க அனுமதி உள்ளது. மற்ற தலைவர்களின் படங்களை வைப்பதற்கு அனுமதி இல்லை.

புகைப்படங்களை வைக்க வங்கியின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அவ்வாறு அனுமதி இல்லாமல் தலைவர்களின் படங்களை வைக்க அனுமதித்தால், அனைத்து ஊழியர்களும் தங்கள் விருப்பமான தலைவர்களின் படங்களை வைக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மத்திய பொருளாதார விவகாரத்துறையின் சுற்றறிக்கையின் படி அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வைக்கலாம் என்ற சுற்றறிக்கையை வங்கி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை.

அதனால், மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தின் 2012 உத்தரவின் படி, வங்கி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கெளரிசங்கருக்கு சேர வேண்டிய பணபலன்களை நிலுவை இல்லாமல் உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
[3/30, 15:11] Sekarreporter: வங்கியில் அம்பேத்கர் படம் வைத்ததாக கூறி ஊழியர் பணி நீக்கம்
செய்யப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எஸ்பிஐ வங்கி அடையாறு கிளையில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கௌரிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியில் அம்பேத்கர் படத்தை வைத்ததற்காகவும்,மற்ற குற்றச்சாட்டுகளை கூறியும் தனக்கு மெமோ அளிக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இதை எதிர்த்து எஸ்பிஐ வங்கியின் மேல்முறையீட்டு ஆணையத்திடம்
மனு அளித்ததாகவும்,ஆனால் பணி நீக்கத்தை உறுதி செய்த ஆணையம் ஆனால் பணி பலன்களை வழங்க உத்தரவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிறகு மத்திய தொழில் தீர்ப்பாயத்தை அணுகியதாகவும் மத்திய தொழில் தீர்ப்பாயம் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டு,பிந்தைய பணிபலன்களை வழங்க உத்தரவிடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மத்திய தொழில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்பிஐ வங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாகவும், வழக்கை விசாரித்த தனி நீதிபதி பணி நீக்கத்தை உறுதி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்..எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, பணி நியமனம் வழங்கி பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் துரைசாமி நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது மனுதார்ர் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி,மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கையில் அம்பேத்கா் படத்தை எல்லா வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாக வாதிட்டார். இந்தக் காரணத்தை பிரதானமாக வைத்துக்கொண்டு, மற்ற குற்றச்சாட்டுகளையும் கூறி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொழில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று கூறி மனுதாரரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பண பலன்களை வழங்க உத்தரவிட்டனர்.
[3/30, 15:48] Sekarreporter: கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சுளேஸ்வரனட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வனிதா, 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற போதும், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ராகினியின் தந்தை, வாக்குச் சீட்டுகளை மறித்து ரகளையில் ஈடுபட்டதால் தனக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழ் திரும்பப் பெற்றதாக கூறி, சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக போட்டி வேட்பாளரான வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டதில் மனுதாரர் வெற்றி பெற்றது தெரிய வந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ரகளையில் ஈடுபட்ட ராகினியின் தந்தைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வ்ழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[3/30, 16:45] Sekarreporter: சென்னை எம்.கே.பி.நகர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). கடந்த 2010-ம் ஆண்டு இவர், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி ஒருவரிடம் வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் பாப்பா என்பவர் அவரை தடுத்து பிடிக்க முயன்றார்.

ஆனால், பெண் போலீசை அவதூறாக திட்டி மிரட்டல் விடுத்த மணிகண்டன் தன்னிடம் இருந்து கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.4,750 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் தனது தீர்ப்பில், இந்த சம்பவத்தின் போது பெண் போலீஸ் பாப்பா தனது உயிரை பணயம் வைத்து மணிகண்டனை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது கத்தியால் கீறியதில் அவர் காயம் அடைந்து 12 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதை கருத்தில் கொண்டு அபராத தொகையில் ரூ.4 ஆயிரத்தை அவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அதேபோன்று அவருக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறி உள்ளார்.

===========
[3/30, 17:32] Sekarreporter: மன்மதலீலை படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி….

ரூ. 30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் செலுத்த வேண்டுமென நிபந்தனை – நீதிபதி எம்.சுந்தர்

குருதி ஆட்டம் மற்றும் மன்மதலீலை படங்களின் விவகாரங்களை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவு

இரண்டாம் குத்து பட வினியோக உரிமைக்கான தொகையில் ரூ. 2 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், மன்மத லீலை படத்தை வெளியீட ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்க்கு தடை விதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் வழக்கு
[3/30, 17:33] Sekarreporter: நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள மன்மத லீலை படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியதாக கூறியுள்ளது.

இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்ஃபோர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை என்றும், அதற்கு பதிலாக வினியோக உரிமையை திருப்பி தருவதாகவும், படத்தில் லாபத்தில் 40 சதவீதத்தை தரும்படியும், நஷ்டம் ஏற்பாட்டால் மீதமுள்ள தொகையை திரும்பி தருவதாகவும் ஒப்பந்தம் செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு கோடியே 40 லட்சம் 42 ஆயிரத்து 732 ரூபாயை வழங்க வேண்டிய நிலையில், ராக் ஃபோர்ட் தயாரிப்பில் அசோக் செல்வம் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற படத்தை தயாரித்துள்ளதாகவும், ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வந்ததாகவும், அதனால் தங்களுக்கு தர வேண்டிய தொகையை, 2020 மே மாதம் முதல் ஆண்டுக்கு 24 சதவீத வட்டியுடன் 2 கோடியே 2 லட்சத்து 21 ஆயிரத்து 570 ரூபாயை வழங்காமல் மன்மதலீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர், 30 லட்சம் ரூபாயை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் மன்மதலீலை படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்ததவிட்டுள்ளார். அதன் பிறகு இரண்டாம் குத்து மற்றும் மன்மதலீலை படங்களின் விவகாரங்களை சமரச தீர்வு மைய நடுவரிடம் நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
[3/30, 19:08] Sekarreporter: மக்களவை தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 11.48 கோடி ரூபாய் வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருடன் தொடர்புடையவர்கள் என தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயை கைப்பற்றிய நிலையில், அந்த பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.

ஆனால் அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை தரப்பில் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கதிர் ஆனந்த் விளக்கம் அளித்த பின்னரும், அதை நிராகரித்துவிட்டு, அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், வருமான வரித்துறை திரட்டிய ஆதாரங்கள் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக இருப்பதாக கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கதிர் ஆனந்த் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கமளித்த பிறகும், நடவடிக்கை எடுப்பதாகவும், பணம் தன்னுடையது இல்லை என்று விளக்கத்தை ஏற்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை நாளை (மார்ச் 31) விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
[3/30, 19:52] Sekarreporter: எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு

ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய அனுமதி நீட்டிப்பு

சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 31:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் 110 கோடிக்கும் அதிகமான நிரந்தர டெபாசிட் தொகையை பறிமுதல் செய்யலாம் என்ற உத்தரவை நீட்டித்து ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கி கணக்கில் இருந்த 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்ல் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,
எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர டெபாசிட்டை இடைக்காலமாக பறிமுதல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலன் கோல்டு அன்ட் டைமன்ட் நிறுவனம் ஆகியவை பதில் அளிக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.சி.பி. இன்ப்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்தன. கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், எங்களது நிறுவனம் கோவையில் உள்ளது. எனவே, இந்த மனுவை சென்னையில் தாக்கல் செய்ய முடியாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாக இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஆலன் கோல்டு அன்ட் டைமன்ட் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், எங்கள் நிறுவனத்தின் நிதியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த காரணத்தை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், லஞ்ச ஒழிப்புத்துறையின் மனு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே, தற்போதைய நிலையில் மனுவை நிராகரிக்க மனுதாரர்கள் கோர முடியாது. இருந்தபோதிலும் கூடுதல் மனு தாக்கல் செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேவேளையில், நிறுவனங்களின் டெபாசிட் தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
[3/30, 20:00] Sekarreporter: மாடலிங் வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு
20 பெண்களை ஏமாற்றி உல்லாசம்

சென்னை, மார்ச் 31: மாடலிங்கில் தனது கட்டுமஸ்தான உடலமைப்பை காட்டி தொழிலதிபர்கள் மகள்கள், பேஷன் டெக்னாலஜி கல்லூரி மாணவிகள் மற்றும் மாலிங் என 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட துணை நடிகரின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த தொழிலதிபர் மகளுடன் 2 இளம் பெண்கள் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர். அந்த புகாரில், கடந்த 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்த முகமது சயாத்(26) என்பவர் பழக்கமானார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்யும் ஸ்டைலான புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நண்பர்களாக தொடங்கி பிறகு காதலித்துதோம். அப்போது கடந்த 2020ம் ஆண்டு வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே அவரது காரிலேயே என்னை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார்.
அதன் பிறகு தன்னை திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்தோம். பிறகு கடந்த டிசம்பர் 21ம் தேதி முகமது சயாத் தனது காரில் நட்சத்திர ஓட்டலுக்கு என்னை அழைத்து சென்றார். அப்போது அந்த ஓட்டலில் இருந்து 3 பெண்கள் முகமது சயாத்தை திருமணம் செய்ய போவதாக என்னிடம் கூறினார்.

முகமதுவுடன் இருக்கும் இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐடியை எடுத்து அதன் மூலம் அவர்களை தொடர்பு கொண்ட போது தான் நான் ஏமற்றப்பட்டது எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து நான் கேட்டதற்கு முகமது சயாத் கொலை செய்துவிடுவேன். எனது அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து முகமது சயாத் மீது கற்பறிப்பு, மிரட்டல், பெண்கள்வன் கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி முகமது சயாத் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி, தங்க மாரியப்பன் முன்பு விசாரணைக்கு வந்துத அப்போது, மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ஜாமீன் தந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார். கடுமையான குற்றம் செய்துள்ளார் என்று வாதிட்டார். இதையடுத்து, முகமது சயாத்தின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

You may also like...