Madras high court oct 31 orders tamil news click the link

[10/31, 11:35] Sekarreporter 1: பெரம்பலூர் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019ல் துவங்கப்பட்ட பெரம்பலூர், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொண்டு குவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை எனவும், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள ஏழு யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாகன்கள் இல்லை எனவும், முழு நேர கால்நடை மருத்துவர்கள் இல்லை எனவும் மனுதாரர் வாதிட்டார்.

மேலும், இந்த மையத்தின் பொறுப்பாளராக இருந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா, வேலூருக்கு மாற்றப்பட்டதை அடுத்து மையம் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, மையத்தில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அரசின் கடமை எனவும், மனிதர்களை போல விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், தற்போது வேலூரில் உள்ள வனத்துறை அதிகாரி சுஜாதா, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்து அதன் நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், நாட்டில் உள்ள பிற யானைகள் மறுவாழ்வு மையத்தில் பின்பற்றப்படும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[10/31, 12:36] Sekarreporter 1: பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி. வீரமணி வாபஸ் பெற்றுக் கொண்டார்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து கடந்த 2008 ம் ஆண்டு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக தான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது. பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புத்தகம் வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

பின்னர் வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி சந்துரு,
கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார், சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் எனவும்,
தனது கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம் என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள்
இப்ராகிம்கலிபுல்லா, கிருபாகரன் அமர்வு ,தனது காப்புரிமையை யாருக்கும் அவர் எழுதி தரவில்லை, அவருடைய எழுத்துகளும் பேச்சும் பொது தளத்திற்கு வந்துவிட்டது என்று கூறி தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ் சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது ..

அப்போது திராவிட கழக தலைவர் வீரமணி சார்பில், இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
[10/31, 12:44] Sekarreporter 1: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி…

அந்த அந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஏற்றவாறு அனுமதி வழங்க மாவட்ட டிஎஸ்பிக்களுக்கு உத்தரவு..

நீதிமன்ற வழிக்காட்டுதல் படி பேரணி நடத்த அனுமதி…
[10/31, 12:52] Sekarreporter 1: இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் உயர் நீதிமன்ற விதித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களின் காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி கடந்த 29ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் அந்தந்த பகுதிகளில் உள்ள கள நிலவரத்தை பொறுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவெடுக்கவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
[10/31, 13:33] Sekarreporter 1: புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2016 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான
புழல் சிறை வார்டன் பேச்சுமுத்து தனது வாக்குமூலத்தில்,
ராம்குமார் கம்பியை கடித்த போது லத்தியால் தள்ளி அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,
சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது எனவும் அரசிக்கு இதில் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் போதியளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ள ஆணையம் ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளது.

ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மாத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது.
[10/31, 14:28] Sekarreporter 1: [10/31, 14:28] Sekarreporter 1: Justice V Sivagnanam of Madras High Court dismisses a petition filed by Electricity & Prohibition Minister V Senthil Balaji to discharge him from a job racketing case. Also rejects a petition filed by a co-accused to quash the case. @THChennai
[10/31, 14:28] Sekarreporter 1: .
[10/31, 14:37] Sekarreporter 1: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில், மீண்டும் புதிதாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு, தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவற்றை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
செந்தில்பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[10/31, 16:14] Sekarreporter 1: கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீர்ப்பளித்துள்ளது.

வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரி வரிவிதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டும் நன்கொடைகளுக்கு வரி வசூலிக்க முடியாது எனக் கூறி, மதிப்பீட்டு அதிகாரி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாகவும், இந்த சட்ட விதிகளை மீறி, நன்கொடை வசூலித்ததுடன், அதற்கு வரிவிலக்கு பெறவும் முயற்சித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இத்தொகைகள் நன்கொடையே என ஆதாரங்கள் மூலம் மதிப்பீட்டு அதிகாரி நிரூபித்துள்ளதாகக் கூறி, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நன்கொடை தொகைக்கான, வருமான வரியை கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என்பதால், முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகளை, மதிப்பீட்டு அதிகாரி, ஆதாரங்கள் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நன்கொடை இல்லாமல் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நன்கொடை வசூலை தடுக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் இணையதளத்தை உருவாக்கி, எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும்
என்றும், அந்த விவரங்களை மாணவர் சேர்க்கையின் போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலமும் கல்வி உரிமைக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டம் கூறுவதாகவும், அதன்படி மாநில அரசுகள் கல்வி வழங்காததால், பெற்றோர்கள் அரசு பள்ளிகளை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை நாடுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கல்வி வழங்குவது என்பது ஒரு புனிதமான சேவை என்றும் கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
[10/31, 16:44] Sekarreporter 1: நவம்பர் 6 ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்

ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்- காவல்துறை

குறிப்பிட்ட மாவட்டங்களில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது- காவல்துறை

காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்- நீதிபதி ஜி.கே.இளந்திரையன்

வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..
[10/31, 16:44] Sekarreporter 1: தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறு நாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2 தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் கடந்த முறை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்ப்பவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவம்பர் 6 ஆம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளாதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்ப்ட்டது.

அப்போது, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவிட்டப்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அன்றைய தினம் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
[10/31, 17:29] Sekarreporter 1: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான வழக்கில் ,இறந்து போன மருத்துவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம் . தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 53 ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினராக உள்ள நிலையில், ஏழு நிர்வாகிகள் முதலில் தேர்வு செய்து அவர்களில், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிலையில் டாக்டர் பாலகிருஷ்ணன் என்ற மருத்துவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மோசடி நடைபெற்றதால், ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் என்பவர் நிர்வாகியாக நியமித்து தேர்தல் நடைபெற்றதாகவும் எனவே அதேபோல் இந்த ஆண்டும் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் முழுமையாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், தற்போது உள்ள உறுப்பினர்கள் பட்டியலில் 117 இறந்துபோன மருத்துவர்கள் பெயர் உள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர் சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது ..அப்போது வழக்கை விசாரித்து நீதிபதி வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்த மருத்துவர்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமை ஒத்தி வைத்துள்ளார்.

You may also like...