Madras high court orders

[11/24, 10:55] Sekarreporter 1: ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஈஷா யோக மையத்தின் நிர்வாகி கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஈஷா யோக மையம் தரப்பில் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு தேவையான ஆங்கிலம், கணிதம், அடிப்படை வேதம் ஆகியவற்றை குருகுல கல்வி மூலம் கற்பிப்பதாகவும், அர்பணிப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்கள் மையத்திற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பபட்டதாகவும், அதை மதித்து குறிப்பிட்ட தேதியில் அனைத்து விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் விசாரணைக்கு ஆஜரான நிலையில், தங்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆணையத்தின் தரப்பில் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு, விசாரணையை முறையாக நடத்தாததால் நீதிமன்றத்தை நாடியதாகவும், அதனடிப்படையில் சம்மனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆணையம் தரப்பில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வரும்போது அதில் சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படும்போது, கேள்விக்குறியாகும்போதும் அதன் மீதான புகாரில் விசாரணை மேற்கொள்ளவோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கவும், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், அதுபோன்று அனுப்பப்படும் சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் சம்மன் அனுப்பும் அமைப்பிற்கு அதிகாரம் இல்லாதபட்சத்திலேயே வழக்கு தொடரமுடியும் எனவும் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஆணையம் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு சம்மன் அனுப்பியதால் வழக்கு தொடர்ந்ததாக ஈஷா யோக மையத்தின் தரப்பில் வாதிடப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, நியாமான, நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார். சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

அதேசமயம் புதிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் நான்கு வாரங்களில் சம்மன் அனுப்ப ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு உரிய ஆதாரங்களுடன் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க ஈஷா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விளக்கங்களைப் பெற்ற பின் ஈஷா அறக்கட்டளைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[11/24, 13:13] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான இடங்கள் ஒதுக்க கோரிய வழக்கை விசாரணைக்கு எடுகக்க கோரி முறையீடு வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்

வழக்கறிஞர்
ஆர். பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்த சேர்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

மீதமுள்ள 168 இடங்களில் கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்

அதன் அடிப்படையில் 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும் ஆனால் கடந்து 2019 ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசிதழில் 89 இடங்கள் பெண்களுக்கு , ஆண்களுக்கு குறைவாக 79 இடங்கள் ஒதுக்கபட்டுள்ளது

இருவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில் அரசிதழில் பெண்களுக்கு தவறாக கூடுதலாக வார்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்

இதை சரிசெய்ய கோரி கடந்த 13 ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது ஆனால் மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் கௌதம் என்பவர் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்தார் இந்த முறையிட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்
[11/24, 13:26] Sekarreporter 1: சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்துக்கோயில் அமைந்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டதை ரத்து செய்து, நிலத்தை மீட்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரைபடங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த பி.சசிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பிரதான சாலையில் அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலை பகுதியில், குலதெய்வமாக வழிபடும் புத்துக்கோயில் இருந்ததாகவும், சமீபத்தில் கோவில் இடிக்கப்பட்டு, பி.சி.பாஷ்யம் என்பவருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு புறம்போக்கில் இருந்த 14 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, 24 நாட்களில் பட்டா வாங்கி, கட்டிடமும் கட்டப்பட்டுள்ளதாகவும்,
கடந்த 1995-1996 சென்னை டவுன் சர்வே பதிவில் அரசு புறம்போக்கு நிலம் என்று இருந்த நிலையில், கடந்த 2020 ஜனவரியில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றிடம் கடந்த ஆண்டு நவம்பர் 17ல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட நிலத்தின் வரைபடம் மற்றும் மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[11/24, 14:24] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது.

வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா வழக்கு..

3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதம்

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என அரசு வாதம்
[11/24, 15:37] Sekarreporter 1: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது*
==
*வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*
==
*நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது – உயர்நீதிமன்றம்*
==
*வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது*
==
*தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை ஆட்சியருக்கு உத்தரவு*
==
*சாவியை மனுதாரரிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
==
*வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு?உயர்நீதிமன்றம்*
==
*கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம்*
==
*ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி*
==
*இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.67.9 கோடி அரசுக்கு திருப்பி அளிக்க உத்தரவு*
[11/24, 15:46] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லாமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.

அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசசாயி, வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது எனக்கூறி அதற்காக பிறபிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். மேலும் 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ. 67,90,52,033 இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ. 36,87,23,462யை வசூலிக்க வருமான வரித்துறை தனியாக தொடங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை வாசித்த பின்னர், ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும், கடற்கரையில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது, வேதா நிலையத்தையும் மக்கள் பணத்தில் ஏன் மற்றொரு நினைவிடம் அமைக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார்.

You may also like...