Madras high court orders decembee 7

[12/6, 11:34] Sekarreporter 1: சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டதற்காக சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி 1992அம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று பணிகளை மேற்கொண்டது.

ஆனால், இதற்கு முறையான அனுமதியை பெறவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு 1994ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் என கூறி, சன் பார்மாவிற்கு 10 கோடியே 58 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சன் பார்மா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆலையின் செயல்பாட்டால் நிலத்தடி நீர் பாதிப்படையவில்லை என்பதால் அபராதத்துக்கும், ஆலையை ஆய்வு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என சன் பார்மா தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சன் பார்மா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 58 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[12/6, 12:21] Sekarreporter 1: கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமனம் நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாட பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், தமிழ் பாடப்பிரிவில் பி.எட் படிப்பை முடித்த பிறகு பி ஏ ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-வது இடத்தில் இருப்பதாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, கல்விக்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை சுட்டி காட்டிய நீதிபதி, ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[12/6, 12:35] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த பிரபு ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடலூரைச் சேர்ந்த பெருமாள், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ரமேஷ், பொன் பாண்டியன், திருவாரூர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முத்தாட்சி ஆகியோருக்கும் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தொடர்புடைய சென்னை சேர்ந்த ரோஜா ராம்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
[12/6, 12:36] Sekarreporter 1: கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமனம் நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாட பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், தமிழ் பாடப்பிரிவில் பி.எட் படிப்பை முடித்த பிறகு பி ஏ ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-வது இடத்தில் இருப்பதாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, கல்விக்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை சுட்டி காட்டிய நீதிபதி, ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[12/6, 13:48] Sekarreporter 1: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களை பரப்புவதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது குற்றம்சாட்டி, அதுபோல பேச தடை விதிக்கக்கோரி மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிர்மல்குமார் தாக்கல் செய்த பதில்மனுவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிட்டார். செந்தில்பாலாஜி வழக்கு குறித்து டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதுவரை செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
[12/6, 16:27] Sekarreporter 1: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மருத்துவ கவுன்சிலின் வாக்காளர் பட்டியல் வெளியிடாமல் தேர்தல் நடத்தப்படுவதாகவும், தேர்தல் நியாயமாக நடத்த ஆன் லைன் மூலம் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்த வகை செய்யும் 1914ம் ஆண்டு சென்னை மருத்துவ பதிவு சட்டத்தில், ஆந்திரா மற்றும் சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களும், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திரா பல்கலைக்கழக செனட் உறுப்பினரையும், விசாகப்பட்டினர் மருத்துவ கல்லூரி மருத்துவரை எப்படி நியமிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த சட்டமும், விதிகளும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்தப்படும் என்றார்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மனுதாரர்கள் சட்டம் குறித்து கேள்வி எழுப்பவில்லை எனக் கூறினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், தேர்தலை ஆன் லைனில் நடத்துவது குறித்தும் விதிகளை வகுக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
[12/6, 16:31] Sekarreporter 1: டாக்டர் அம்பேத்கரை காவித் தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவரை வெளியேற்றினர்.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தரப்பில் காவி உடை அணிந்து, விபூதி குங்குமம் வைத்து இருப்பது போன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டன குரல்கள் எழும்பி வரும் நிலையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த முயற்சித்துள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த வழக்கறிஞர்கள் தடுத்துள்ளன. பின்னத் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி அடித்து ஒட்டியதற்கு காண்டங்களை தெரிவித்ததுடன், அர்ஜூன் சம்பத் மற்றும் சங்க் பரிவார் அமைப்புகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

அம்பேத்கர் சிலை இருந்த பகுதியில் இருந்து கோஷங்களை எழுப்பியபடியே, அர்ஜூன் சம்பத் வெளியேறும்படி பின்தொடர்ந்து வந்தனர்.

வழக்கில் ஆஜராக அனுமதி சீட்டு பெற்று வந்துள்ள தன்னை ஏன் வெளியேற்றுகிறார்கள் என காவல்துறையினரிடம் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பினார்

அம்பேத்கர் சிலையிலிருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் கட்டிடம் வரை இந்து மக்கள் கட்சிக்கு எதிராகவும், அந்த சம்பத்துக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பிய வழக்கறிஞர்கள், அர்ஜுன் சம்பத் கிளம்பிய பின்னர் கலைந்து சென்றனர்.
[12/6, 16:42] Sekarreporter 1: அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என்றும், விபூதி குங்குமம் பூச மாட்டேன் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சந்திரசேகர் வழக்கை முடித்து வைத்தார்.
[12/6, 20:22] Sekarreporter 1: நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தாதா திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி துரைராஜன் என்கிற ராகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கில் தான் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்றும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது நண்பருடன் இணைந்து ஆர்.ஆர். சினி புரடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மணி(Money) என்ற திரைப்படத்தை தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் யோகி பாபு, நிதின் சத்யா, நாசர் சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016 தயாரிக்கப்பட்ட இந்த படம் திரைப்பட தணிக்கை வாரியத்தில் கடந்த 2016ல் தணிக்கையானதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிஷோர் குமார் என்பவர் , தனது தயாரிப்பு நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்கை திருடிய வழக்கும் விருகம்பாக்கம் காவல்நிலையத்நில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார் .இந்த நிலையில் அன்னை தெரசா இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ,மணி என்ற தனது படத்தை, தான் தயாரித்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த சிவில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். உயர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே, தற்போது அந்த கதையை தாதா என்ற பெயரில் மாற்றி, வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாதா படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் வழக்கு விசாரணையை 23ம் தேதி ஒத்தி,வழக்கு குறித்து கிஷோர் குமார் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார் ்

You may also like...