Madras high court orders feb 11. ஐகோர்ட் உத்தரவு

[2/10, 11:23] Sekarreporter 1: ஆலய பிரவேச சட்டப்படி, இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விளம்பர பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1970ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும், கோவில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோவில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும் எனவும், தஞ்சை, மதுரை போன்ற கோவில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.

பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்.

அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா எனவும், ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோவிலில் உள்ளது எனத் கேள்வி எழுப்பினர்.

அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? எனவும், ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், அதுசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், பல கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய கூடாது என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணிய கூடாது என்ற ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், நீதிமன்றம் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றும், இந்து அல்லாதோர், கொடி மரத்தை தாண்டி கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[2/10, 12:13] Sekarreporter 1: ஆதிசங்கரர் சிலை திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான ரங்கராஜன் நரசிம்மன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி, மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு கோவிலில் அனுமதியளிக்க கூடாது எனவும், கோவில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறநிலைய துறை ஊழியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள்கள், கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலைய சட்ட விதிகளை மீறி, உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் பிரதமர் நதேந்திர மோடி, ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்ச்சி, தமிழகத்தில் 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல என்றும், இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், அது அரசியல் அல்ல… மதம் சார்ந்த ஆன்மீக நிகழ்ச்சி தான். அறநிலைய துறை எந்த விதிகளையும் மீறவில்லை என விளக்கமளித்தார்.

தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவில்களில், தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதை அரசியல் நிகழ்ச்சியாக கருத முடியாது என உத்தரவிட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவரது பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றிதான் இருந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோல ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோவில் வளாகங்களில் உள்ளேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்க அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

கோவில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறித்தி, வழக்கு குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[2/10, 12:13] Sekarreporter 1: நாட்டில் சிலர் ஹிஜாப்க்காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா என்றும் கேள்வி எழுப்ப்பியுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1970ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோவில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும் எனவும், தஞ்சை, மதுரை போன்ற கோவில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.

பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் சிலர் ஹிஜாப்க்காக போராடுவதும், சிலர் கோவில்களில் வேட்டிக்காக போராடுவதும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர். நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா என்றும் கேள்வி எழுப்பினர்.

அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா எனவும், ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோவிலில் உள்ளது எனத் கேள்வி எழுப்பினர்.

அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? எனவும், ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், அதுசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், பல கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய கூடாது என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணிய கூடாது என்ற ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், நீதிமன்றம் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றும், இந்து அல்லாதோர், கொடி மரத்தை தாண்டி கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், ஆடைக்கட்டுப்பாடு விதிகள் குறித்த ஆதாரங்களை மனுதாரரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[2/10, 12:42] Sekarreporter 1: ஆதிசங்கரர் சிலை திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான ரங்கராஜன் நரசிம்மன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி, மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு கோவிலில் அனுமதியளிக்க கூடாது எனவும், கோவில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறநிலைய துறை ஊழியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள்கள், கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலைய சட்ட விதிகளை மீறி, உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் பிரதமர் நதேந்திர மோடி, ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்ச்சி, தமிழகத்தில் 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல என்றும், இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், அது அரசியல் அல்ல… மதம் சார்ந்த ஆன்மீக நிகழ்ச்சி தான். அறநிலைய துறை எந்த விதிகளையும் மீறவில்லை என விளக்கமளித்தார்.

தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவில்களில், தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதை அரசியல் நிகழ்ச்சியாக கருத முடியாது என உத்தரவிட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவரது பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றிதான் இருந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோல ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோவில் வளாகங்களில் உள்ளேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்க அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

கோவில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறித்தி, வழக்கு குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[2/10, 12:51] Sekarreporter 1: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரிய மனு மீதான நடவடிக்கையை தொடர வேண்டாம் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள்,
யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் நிராகரித்துவிட்டார்.

ஆட்சி மாற்றத்துக்கு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென, புதிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரிடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து முந்தைய உத்தரவை திரும்பப் பெற்ற தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மீண்டும் விசாரணை நடைமுறையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, குருமூர்த்தி தரப்பில், ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட விண்ணப்பம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், துரைசாமி திமுகவுக்கு ஆதரவானவர் என்பதால் முந்தைய தலைமை வழக்கறிஞரின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து குருமூர்த்தி மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கறிஞர் எஸ். துரைசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[2/10, 14:16] Sekarreporter 1: [2/10, 13:41] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1491686043799592961?t=2RzKWRJEl3ew7yj1QWgK8w&s=08
[2/10, 13:41] Sekarreporter 1: THE HONOURABLE MR. JUSTICE P.VELMURUGAN
Cont P No.1330 of 2021
in CrL.R.C.No.112 of 2021

S.Vasanthi-
Petitioner/Petitioner
For Petitioner:
Mr.R.Singaravelan,
Senior Advocate for Mr.V.L. Akshai Sajin Kumar

For Respondent:
Mr.S.Sugendran, Government Advocate(Crl.side)

8. Though this Court finds that the capacity of the investigating officer is not upto the mark and within her capacity she has investigated the case, the incapacity of the investigation officer cannot be treated as wilfully disobey the order of this Court. Unfortunately, as on date, the police department is running with 90% of the corruptive officers as well as the officers not having adequate capacity to do the investigation and only 10% of the officers are honest and abled officers. The 10% of officials alone cannot do all the investigation. Therefore, it is right time to sensitize the officials and find out to eradicate corruptive officers and give adequate training to the officers those who are not corruptive but they are incapacity to do investigation. It is relevant to state that on the date of preferring original complaint the alleged executor of the sale deed was very much alive, if the respondent police immediately examined the said Kamalam, the entire truth would have come out Whereas till the death of the said Kamalam, the respondent police did not examine her.

9. In view of the above, this Court finds that there is no wilful disobedience by the respondent police. Hence, this Contempt Petition is closed However, the petitioner is at liberty to take action against the respondent police for her incapacity, in the manner known to law and also work out her remedy before the Judicial Magistrate, by way of filing the protest petition and proceed with the case further in accordance with law.
[2/10, 17:36] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு மற்றும் அவரது பெற்றோர் மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த புகாரில் 6 வாரங்களில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த 10 ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளரான ஓம்பிரகாஷ் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தியாகதிருகம் ஊராட்சி ஒன்றிய செயலாளரான அய்யப்பா, ஊராட்சி ஒன்றியக் குழு தலைரான அவரது மனைவி தையல் அம்மாள், கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் 2001லிருந்து தற்போது வரை 55 வீடுகள், இரண்டு பங்களாக்கள், நூறு ஏக்கர் நிலம் என அதிகார துஷ்பிரயோகம் மூலம் சொத்து சேர்ந்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றவர்களிடமிருந்தும், அங்கன்வாடி பணிகளுக்கும் லஞ்சம் வாங்கியதன் மூலமும் சொத்து சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 65 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு 70 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த அக்டோபர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ள்ளார்.

அரசு சிமெண்ட், அம்மா சிமெண்ட், கம்பிகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள் மூலமாக முறைகேடாக பெற்றுள்ளதாகவும், புகாரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, புகார் தற்போது தான் கிடைத்துள்ளது என்றும், 6 வாரங்களில் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவையான நடவடிக்கையை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அவ்வாறு விசாரணை தொடங்கினால் விரைவில் முடிக்க வேண்டுமெனவும், விசாரணையின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது பெற்றோரும் பதிலளிக்குபடி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
[2/10, 17:44] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும்படி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம், கலர்குப்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரியா, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில், வயிற்றில் பஞ்சை வைத்து தைத்தால உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணைய உறுப்பினரான துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ சேவை குறைபாடு காரணமாக மரணமடைந்த பிரியா ஒரு தினக்கூலி என்பதால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாளொன்றுக்கு ஒன்றுக்கு 250 ரூபாய் வருமானமாக நிர்ணயித்தும், அவரது மரணம் மற்றும் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காகவும், 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்

அந்த தொகையை கணவருக்கு வழங்க வேண்டுமெனவும், அந்த தொகையில் பாதியை குழந்தை பிரியாஸ்ரீ பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக பிரசவ வார்டுகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[2/10, 17:47] Sekarreporter 1: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் மூலம் முறைகேடாக கிராவல் அள்ளப்பட்ட புகாரில் கனிம வளம் மற்றும் வருவாய் துறையை சேர்ந்த 11 அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம்,
உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், கனிம வளத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள், வருவாய்த் துறையை சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் ஒரு தனி நபர் என 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்று அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்துள்ளார்.
[2/10, 17:53] Sekarreporter 1: காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தவறான புகார் என புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதை நாமக்கல் நீதிமன்றம் ஏற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் மீது மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது.

இதன்படி, வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மறுவிசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து அறிக்கை அளித்ததாக கூறி, பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், நில விற்பனை தொடர்பான சிவில் வழக்கு என்பதால் வழக்கை முடித்து வைத்ததாகவும், மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.

மேலும், தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால் மன்னிப்பு கோருவதாக ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை எனக் கூறி, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்த போதே விசாரித்திருந்தால் முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக கூறிய நீதிபதி, ஊழல்வாதி உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[2/10, 19:37] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 22ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அது முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக , அவர் பதவி வகித்து வரும் அவரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம், பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விரைவில் அவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 12ம் தேதி வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது.

You may also like...