Madras high court orders june 7 karthic gobinath case , police bail , eps ops admk case

[6/7, 13:57] Sekarreporter: சென்னையில் விக்னேஷ் என்ற வாலிபர் லாக்கப் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார்.
இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார்.
இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு,
சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் காவல்துறையினர் விக்னேஷை லத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது அம்பலமானது
இதனையடுத்து குற்றவாளியாக காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி முன்பு நடைபெற்றது.
ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்றுவருவதால் ஜாமீன் வழங்க கூடாது சிபிசிஜடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[6/7, 16:04] Sekarreporter: சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பியூஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யு டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரில் பதிவான வழக்கில் மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவையும், அவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கார்த்திக் கோபிநாத்தின் மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்கொடை வசூலை தொடங்கிய மூன்று நாட்களிலேயே 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாமென அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிதியை பராமரிக்க திருப்பணி கணக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை கோவில் பணிகளுக்கு தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும், அப்படி பயன்படுத்தியதற்கான காரணங்களை தெரிவிக்காமல் கோவில் செயல் அலுவலர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தாமலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மனு மீது வாதிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிதிலமடைந்த கோயிலின் காட்சிகளை வெளியிட்டு, மக்களிடம் அனுதாபம் தேடி பணம் வசூல் செய்துள்ளதாகவும்,
5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் கடைசி வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வசூலிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.

வசூலித்த பணத்தில் 2 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், அவருக்கு உடைந்தயாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தனிப்பட்ட கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் அவரது கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளதாகவும், மிலா ஆப் மூலம் பணம் வசூலித்ததே குற்றம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கார்த்தி கோபிநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதிலமடைந்த கோவிலை சரி செய்ய கோரிக்கை விடுத்ததை ஏற்று மக்கள் பணம் அளித்ததாகவும், கோயிலை சரி செய்ய அரசு முயற்சிக்கவில்லை எனவும், அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக நடந்ததாகவும், முறைகேடுக்கு வாய்ப்பில்லை எனவும், பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

கார்த்தி கோபிநாத் தனது சொந்த பணத்தையும் வழங்கியுள்ளார் எனவும் வசூல் செய்யப்பட்ட பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட அவரால் எடுக்க முடியாது எனவும், தனிப்பட்ட கணக்கை இதில் குறிப்பிடக்கூட இல்லை எனவும், 33 லட்சம் ரூபாய் மொத்தமாக மிலா ஆப்பில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை மிலா ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், பணம் என்னுடைய பொறுப்பில் இல்லை எனவும்,

பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் படி 3மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாக கார்த்திக் கோபிநாத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ((ஜூன் 13ஆம் தேதிக்கு)) தள்ளிவைத்துள்ளார்.
[6/7, 18:19] Sekarreporter: ஆந்திராவிலிருந்து 150 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில், பெண் உள்ளிட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2017 ஜூலையில் ஆந்திராவில் இருந்து மதுரவாயல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு நுண்ணரிவு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, சொகுசு கார் ஒன்றிலிருந்து 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதனடிப்படையில், காரில் பயணித்த மதுரை மாவட்டதைச் சேர்ந்த பாக்கியம், திருமுருகன், பாலமுருகன் ஆகிய மூவரையும் போதைப்பொருள் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்தார். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், மூவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதால், 60 வயதான பாக்கியத்துக்கு10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடுள்ளார். திருமுருகன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணரிவு பிரிவு போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், ஏ.செல்லத்துறை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
[6/7, 19:39] Sekarreporter: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, அக்கட்சியின் அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017 ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்,
இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும், அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

விதிமுறைகளுக்க முரணாக ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சூரியமூர்த்தி கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

You may also like...