Madras high court orders nov 18

[11/18, 10:58] Sekarreporter 1: தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை ப்ரியா மரணமடைந்த வழக்கில், இரு மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான ப்ரியா, பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.

தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15ம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்துள்ளனர்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
[11/18, 14:15] Sekarreporter 1: சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் மற்றும் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் தொடர்ந்த வழக்கு…

ஆடர்லி பணியை செய்ய மறுத்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் தன்னை பணி நீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு..

மத்திய அரசின் ஆர்டர்லி ஒழிக்கும் முறையை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உத்தரவு..
[11/18, 14:15] Sekarreporter 1: சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் மற்றும் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை பார்க்கும் போது தனது உயர் அதிகாரி தன்னை ஆடர்லி வேலை பார்க்க உத்தரவிட்டதாகவும் ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கான்ஸ்டபிள் பணிக்கான அனைத்து வேலைகளும் செய்ய தயாராக இருந்த நிலையில் , உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆடர்லியாக பணிபுரிய மறுத்ததால், பழிவாக்கும் நோக்கில் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே தனது பணி நீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மனிதர்களை கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கான்ஸ்டபிளை ஆடர்லியாக பணிபுரிய வற்புறுத்துவது கண்ணியத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே மனுதாரரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுவதாகவும், மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆடர்லி முறையை ஒழிக்கும் மத்திய அரசின் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆர்டர்லி முறையை பயன்படுத்தி வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
[11/18, 14:36] Sekarreporter 1: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்

மிலாப் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த ரூ.
30 லட்சத்தை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு

சிறுவாச்சூர் கோவிலின் சிலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதால் வசூலிக்கப்பட்ட பணம் தேவையில்லை : அரசு தரப்பு

கோவில் சீரமைக்கப்பட்டுவிட்டால் வசூலிக்கப்பட்ட தொகையை வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதற்காக அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என கார்த்தி கோபிநாத் தரப்பு கோரிக்கை

கோவிலின் திருப்பணிகளுக்கென குழு இருக்கும் போது மிலாப் செயலி மூலம் ஏன் பணம் வசூலித்தீர்கள் ? – நீதிபதி கேள்வி

வழக்கு விசாரணை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளிவைப்பு
[11/18, 14:41] Sekarreporter 1: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மிலாப்-ற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக
30 லட்ச ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான கார்த்திக் கோபிநாத் தரப்பு வழக்கறிஞர் ராகவாச்சாரி, கோவிலின் திருப்பணிக்காக பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் வழங்குவதற்கு சட்டத்தில் தடையில்லை என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறுவாச்சூர் கோவிலின் சிலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதால் இந்த பணம் தேவையில்லை என கூறினார்.

கோவில் சீரமைக்கப்பட்டுவிட்டால் வசூலிக்கப்பட்ட தொகையை வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதற்காக அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பணம் வசூலித்தது தொடர்பான விவகாரத்தின் விசாரணை நிலுவலையில் உள்ளதால் பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டது.

கோவிலின் திருப்பணிகளுக்கென குழு இருக்கும் போது நீங்கள் ஏன் மிலாப் மூலம் பணம் வசூலித்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி நன்கொடையாளர்கள் விவரத்தை தாக்கல் செய்ய மிலாப்-க்கு உத்தரசவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
[11/18, 15:43] Sekarreporter 1: மருத்துவர்களுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தற்போது தான் சம்பவம் நடந்துள்ளது.
விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும் : நீதிபதி

அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு அறுவை சிகிச்சை செய்தேன். இருவரும் நன்றாக உள்ளனர் : மருத்துவர்கள்

அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டேன் எப்படி கூற முடியும் ? நீதிபதி

குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் : மருத்துவர்கள்

பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது : அரசு

எங்கள் பாதுகாப்பு வேண்டும் : மருத்துவவர்கள்

உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும் : நீதிபதி

உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரணையடையுங்கள் : நீதிபதி

மனு மீதான விசாரணை 2 வார்த்திற்கு ஒத்திவைப்பு

மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது : நீதிபதி

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது : மருத்துவர்கள்

சரணவடைதற்கு காவல் நிலையத்திற்கு செல்வதே ஆபத்தாக உள்ளது. நூற்றுக்கணக்கான மிரட்டல் வருகின்றன : மருத்துவர்கள்
[11/18, 15:55] Sekarreporter 1: மருத்துவர்களுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தற்போது தான் சம்பவம் நடந்துள்ளது.
விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும் : நீதிபதி

அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு அறுவை சிகிச்சை செய்தேன். இருவரும் நன்றாக உள்ளனர் : மருத்துவர்கள்

அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டேன் எப்படி கூற முடியும் ? நீதிபதி

குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் : மருத்துவர்கள்

பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது : அரசு

எங்கள் பாதுகாப்பு வேண்டும் : மருத்துவவர்கள்

உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும் : நீதிபதி

உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரணையடையுங்கள் : நீதிபதி

மனு மீதான விசாரணை 2 வார்த்திற்கு ஒத்திவைப்பு

மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது : நீதிபதி

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது : மருத்துவர்கள்

சரணவடைதற்கு காவல் நிலையத்திற்கு செல்வதே ஆபத்தாக உள்ளது. நூற்றுக்கணக்கான மிரட்டல் வருகின்றன : மருத்துவர்கள்
[11/18, 16:23] Sekarreporter 1: 2 வாரங்கள் கைது செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க தான் நீதிபதிகள் மறுப்பு..

முன் ஜாமின் விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
[11/18, 16:24] Sekarreporter 1: MadrasHighCourt Justice AD Jagadish Chandira today adjourned by two weeks the anticipatory bail petitions filed by govt doctors who performed surgery to footballer Priya, judge declined repeated plea for anticipatory bail
[11/18, 16:26] Sekarreporter 1: பிரியா மரணம் – மருத்துவர்கள் ஜாமின் கோரி மனு

மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்கள் 2 பேரும் ஜாமின் கோரி மனு

காவல் துறை 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
[11/18, 16:26] Sekarreporter 1: உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும், வேண்டுமானால் சரண் அடையுங்கள் – நீதிபதி

சரணடைவதற்கு காவல் நிலையம் செல்வதே ஆபத்தாக உள்ளது, இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது
[11/18, 17:22] Sekarreporter 1: கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி இரு மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னும் குணமடையாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.

தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 15ம் தேதி மரணமடைந்தார்.

பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் தற்போது தான் நடந்துள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

தொடர்ந்து, மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கிய மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர், அன்றைய தினம் மேலும் இரு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டதாகவும், அவர்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து துன்புறுத்துவதாகவும், சரணடைய தயாராக இருப்பதாகவும், சம்பவம் அரசியலாக்கப்பட்டு, அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதால் காவல் நிலையத்துக்கு செல்வதே ஆபத்தாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சம்பவம் குறித்து விசாரித்த மருத்துவர் குழு அளித்த அறிக்கையில், மனுதாரர்கள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, அறிக்கையை தாக்கல் செய்தார்.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், மனுதாரர்கள் கவன குறைவாக செயல்பட்டார்களா? இல்லையா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் தெரிவித்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர், இருவாரங்களில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

அதுவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சரணடைந்தால் காவல் துறையினர் கவனித்துக் கொள்வர் எனத் தெரிவித்தார்.

பின்னர் மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என்றும் இரு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
[11/18, 17:42] Sekarreporter 1: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021-22ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நடப்பு 2022-23ம் கல்வியாண்டுக்கு மொத்தமுள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதை எதிர்த்தும், தமிழக அரசு 2020ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்பட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்தி நிரப்ப அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2021-22 ம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடுத்த கல்வியாண்டுகளுக்கும் பொருந்தும் என்பதால் கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

இதுசம்பந்தமாக எந்த விளக்கமும் பெறத் தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சங்கரன் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களூம் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்ற உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
[11/18, 17:45] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-க்கு கடிதம்

நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கான கெட்ட செய்தி : கடிதம்

சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை

இதே கோரிக்கையை வலியுறுத்தி லா அசோசியேசன் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது
[11/18, 18:23] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் லா அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கான கெட்ட செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்ற பரிந்துரையை திரும்ப பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லா அசோசியேசன், ஓய்வின் விளிம்பில் உள்ள நீதிபதி டி.ராஜாவை அவரின் ஒப்புதல் இன்றி பணியிட மாற்றம் செய்வதற்கு பரிந்துரைத்தது ஆரோக்கியமான சூழல் அல்ல எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

You may also like...