SEKAR REPORTER

Madras high court today 10 news roundup

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[05/09, 10:56] sekarreporter1: அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் இலவசமாக வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களுடன், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு எரியூட்டும் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது, பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களில் நாப்கின்கள் வைக்கப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும், பழுதாகி, காட்சி பொருளாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில், இதனால் மாணவிகள் சிரமத்தை சந்திப்பதாகவும், சில பள்ளி, கல்லூரிகளில் நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரங்கள் இல்லாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், பெண் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த வல்லி தாக்கல் செய்த வழக்கில், நாப்கின் இயந்திரங்கள் வைப்பது, பராமரிப்பது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியது.

இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என்பது தினத்தந்தி செய்தி மூலம் தெரிய வருவதால், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், இந்த வழக்கை எண்ணிட்டு செப்டம்பர் 12ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[05/09, 11:52] sekarreporter1: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சமூக நலத்துறை அமைச்சராக 1991 – 1996 காலக்கட்டத்தில் இருந்தவர் இந்திரகுமாரி. அந்த காலகட்டத்தில், அவருடைய கணவர் பாபு நிர்வாக அறங்காவலராக இருந்த அறக்கட்டளைக்கு, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான பள்ளி துவங்குவதற்காக சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, கிருபாகரன் (இறந்து விட்டார்), சண்முகம், வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் செயலர் சண்முகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து 2021ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட சிறப்பு நீதிமன்றம், வெங்கடகிருஷ்ணன் என்பவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திரகுமாரி உள்பட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனு நிலுவையில் இருந்த போது, கடந்த ஏப்ரல் மாதம் இந்திரகுமாரி காலமானார்.

மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி இறந்துவிட்டதால் அவரை மட்டும் விடுவித்தும் மற்ற அனைவருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
[05/09, 13:12] sekarreporter1: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை என்கவுண்டர் செய்யக்கூடாது என அளிக்கப்பட்ட மனுவை பரீசிலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரவுடி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி நாகேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனவும் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை காவல் துறையினர் போலி என்கவுண்டர் செய்ததாகவும் அதே போல தனது கணவரையும் போலீசார் என்கவுண்டர் செய்யக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளித்ததாகவும் ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், என்கவுண்டர் செய்வோம் என விசாரணையின் போது போலீசார் நாகேந்திரனிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, எந்த ஆதாரங்களும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[05/09, 14:48] sekarreporter1: போலி என்சிசி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரைத்துள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்திருந்தார்..

இந்த வழக்கை விசாரித்தவுயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு குழுவின் தலைமை ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், சிறப்பு குழு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள்,மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாகவும், பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு குழுக்கள் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று, உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாகவும், போக்சோ புகார்களை எப்படி வழங்குவது , ஆசிரியர்கள் எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பந்தபட்ட மாணவிகளிடம் மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பெற்றோர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல கல்லுரிகளில் மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்தேயேக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல பாலியல் தொந்தரவு பிரச்சனைகளை உதவி எண்களில் தெரிவிக்க ஊக்குவிக்கப்பட்டதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைமுறைகளை உருவாக்க, சிறப்புக்குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், உரிய அனுமதி பெறாமல் என்சிசி முகாம் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் ஏற்படையதாக இல்லை. முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரை தீவிர பரிசிலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, பொறுப்பு தலைமை நீதிபதிபம் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[05/09, 14:51] sekarreporter1: Stay against pachiappa college principle regarding women commission summon
[05/09, 14:51] sekarreporter1: Stay against pachiappa college principle regarding women commission summon
[05/09, 15:44] sekarreporter1: Sobba FIR quashed
[05/09, 15:44] sekarreporter1: மத்திய அமைச்சர் சோபா எப்ஐஆர் ரத்து மன னிப்பு நீதிபதி ஏற்பு
[05/09, 15:45] sekarreporter1: [05/09, 15:42] sekarreporter1: Sobba FIR quashed
[05/09, 15:44] sekarreporter1: மத்திய அமைச்சர் சோபா எப்ஐஆர் ரத்து மன னிப்பு நீதிபதி ஏற்பு
[05/09, 15:45] sekarreporter1: Tamil Nadu government tells the Madras High Court it has taken a policy decision to accept #ShobhaKarandlaje’s apology affidavit and that it does not want to pursue the matter any further.
[05/09, 15:50] sekarreporter1: பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரியதை அடுத்த அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையமைச்சர் ஷோபா தரப்பில்,
பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ்.ராமன், ஷோபா மன்னிப்புக்கோரியதை தமிழக மக்கள் சார்பாக அரசு ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[05/09, 15:55] sekarreporter1: [05/09, 15:50] sekarreporter1: https://x.com/LiveLawIndia/status/1831637051810398698?t=WkYGVIJsy5Q69NzXTXcn1w&s=08
[05/09, 15:50] sekarreporter1: #MadrasHC quashes proceedings against Minister #ShobhaKarandlaje for her comments linking people of TN to #RameshwaramCafeBlasts
Justice G Jayachandran quashes the FIR after AG informs him that state has accepted Karandlaje’ apology
[05/09, 17:20] sekarreporter1: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 2014 முதல் 2024ம் ஆண்டு வரையிலான வருமானம் செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் கோவிலில் வருவாயை கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டினார்.

தீட்சிதர்களின் தவறான நிர்வாகம் காரணமாக கோவிலின் வருமானம் பெருமளவு குறைந்து விட்டதால் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் வந்த வருமான குறித்த கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள், அர்ச்சனை, தரிசனத்துக்கு டிக்கெட் அடித்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அதிக வருவாய் கிடைத்தது என்று தெரிவித்தார்.

கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு உண்டியல் அகற்றப்பட்டு விட்டது. பூஜை, அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐந்தாம் நூற்றாண்டில் சோழர்களால் 44 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பழமையானது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடராஜரை தரிசிக்க வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன கட்டிடமான கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு பெருந்தொகை தேவைப்படுகிறது எனச் சுட்டிக்காட்டியது.

சிதம்பரம் கோவில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது. கோவில் காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை அர்ச்சனை தரிசனத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீட்சிதர்கள் தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014 15 முதல் 2023-24 ம் ஆண்டுகள் வரையிலான வருமானம் செலவு குறித்த கணக்கு புத்தகங்களை செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
[05/09, 17:37] sekarreporter1: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடதக்கது.

மேலும், சட்ட விரோத பண பரிமாற்றச் தடை சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார்.

அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார். இதையடுத்து கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாரிடம் குறுக்கு விசாரணை இன்று நிறைவு பெற்றது.
[05/09, 17:56] sekarreporter1: தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றிய நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு ? என அதிமுக சார்பில் வாதிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே நடந்துள்ளதாகவும், தங்களது பணியை செய்யாத போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கள்ளச்சாராயம்
வருவதாகவும் எனவே இது தொடர்பாக சிபிஐ- யால் மட்டுமே விசாரிக்க முடியும் எனவும்
சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே சொல்லப்பட்ட அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது ஆனால் கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பினார்.

வாதங்கள் நிறைவடையாததை அடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் பத்தாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
[05/09, 18:16] sekarreporter1: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலம் யார் பெயரில் உள்ளது என்பது குறித்து அனைத்து விவரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வள்ளலாரின் சத்தியஞான சபைக்கு தானமாக வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள 27.86 ஏக்கர் நிலங்களை கண்டறிய 10 அதிகாரிகள் அடங்கிய குழுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளதாகக் கூறி, அதுகுறித்த உத்தரவை தாக்கல் செய்தார்.

ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டிய தலைமை வழக்கறிஞர், வடலூரில் உள்ள 107.08 ஏக்கர் நிலம் வள்ளலார் தெய்வ நிலையம் என்ற பெயரில் பதியப்பட்டிருந்தது. 1975 ம் ஆண்டுக்கு பின் 71 ஏக்கர் நிலம் மட்டுமே வள்ளலார் தெய்வ நிலையம் பெயரில் உள்ளதாகவும், மீதமுள்ள 34 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

34 ஏக்கர் நிலமும் தனி நபர்கள் பெயருக்கு பட்டா வழங்கியிருந்தால், அது சட்டவிரோதம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்நிலங்கள் 1975ம் ஆண்டுக்கு பின் யார் பெயரில் உள்ளது? தற்போது யாரிடம் உள்ளது என்பதை கண்டறிந்து, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் செப்டம்பர் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவில், குறிஞ்சிப்பாடி, வடலூர் சார் பதிவாளர்களையும் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், காலி நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும் நிலத்தில் வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வள்ளலார் சத்தியஞான சபை அறங்காவலர்கள், அறநிலையத் துறையுடன் கலந்தாலோசித்து, 71 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பு கோரவும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[06/09, 07:44] sekarreporter1: பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை சம்பந்தப்பட்டுள்ளதால், விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய சட்டரீதியான நடைமுறை தேவைப்படுகிறது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியின் போது இயற்கை நீர்நிலைகளை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிகளை உருவாக்கியும், அதை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளதால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி சிலைகளை கரைக்க உத்தரவிட வேண்டும் என, சென்னையை சேர்ந்த அரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் தலைமையில், பொதுத் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத் துறை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது

இந்த கூட்டுக்குழு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு முன், குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூடி, விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கை நீர்நிலைகளை உருவாக்குவது, முன்கூட்டியே சிலை கரைக்கும் நீர்நிலையை அடையாளம் காண்பது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு சிலைகள் தயாரிப்பதை தடுப்பது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதேபோல, விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக, சிலைகளை கரைக்க அனுமதி கோருபவர்களிடம் இருந்து, சிலையில் அளவுக்கு ஏற்றவாறு வசூலிப்பதற்கான கட்டணத்தை கூட்டுக்குழு நிர்ணயிக்க வேண்டும் எனவும், அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலையை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும் எனவும், இத்தொகையை, தொடர்புடைய நீர்நிலையை பராமரிக்க செலவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பதை பொறுத்தவரை பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை மற்றும் அவர்களின் உணர்வு சார்ந்தது என்பதால் அதை செயல்படுத்த சட்டரீதியான செயல்முறை தேவைப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் கருதி, சிலைகளை கரைக்கும்போது ஏற்படும் மாசுவை கண்காணிக்க பொதுமக்கள் பங்களிப்பை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கரைப்பின்போது மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மாசு ஏற்படாத வகையில் சிலைகளை கரைக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

இதை பதிவு செய்த தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version