Madurai high court orders nov 24

[11/25, 07:04] Sekarreporter 1: குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்?- மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி*

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.

சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது. இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு,

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

=

நிலத்தை மோசடியாக பதிவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு…

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வருகிற டிசம்பர் 2 தேதிக்குள் பதிவுத்துறை தலைவர் பிறப்பிக்க வேண்டும். என கூறி வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராஜசேகரன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில்,
“எனக்கு சொந்தமான நிலத்தை மற்றொரு தரப்பினர் மோசடி ஆவணங்கள் மூலம் பந்தல்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற இதுசம்பந்தமாக உரிய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் எந்த உரிமையும் கோருவது கூடாது என்று கடந்த 2020-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதுவரை அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், வழக்கு குறித்து உரிய அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டுவிட்டது. இறுதி உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி,

* இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வருகிற டிசம்பர் 2 தேதிக்குள் பதிவுத்துறை தலைவர் பிறப்பிக்க வேண்டும்.

* மனுதாரர் சொத்து ஆவணத்தில் தவறு நடந்திருந்தால் அதை பத்திர பதிவுத்துறை தலைவர் தானாக முன்வந்து திருத்த வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் உரிமை கோர கூடாது.

என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

=

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார்.

ஆனால் அதற்கும் 164 வாக்குமூலத்தை வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது.

கீழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண இயலாது. நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. இது கட்டாயம் தேவையானது எனவும் தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் தோன்றுகிறது.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, போனில் பேசுவதோ கூடாது. ஸ்வாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

=

மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரிய வழக்கு…

தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “எனது கணவர் ஆனந்தராஜுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த போது இருதயப்பிரிவு மருத்துவர் இல்லாததால் காலையிலேயே அறுவை சிகிச்சை
செய்ய இயலும். அவசர சூழல் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.

சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமிழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையே நம்பியுள்ளனர்.

ஆனால், இது போல அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை.

ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் 4D echo cartography உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
[11/25, 07:04] Sekarreporter 1: பழனியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனையும், 10ஆயிரம்ரூபாய் அபராதமும்
விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பழனி ராஜாஜி சாலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 2019ம் ஆண்டு தனது தந்தை மாரிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து பழனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது‌. இதில் மணிகண்டன் குற்றவாளி‌ என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது‌. மேலும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
[11/25, 07:04] Sekarreporter 1: வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தடுப்பது சவாலாக உள்ளது, அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரிட்டாபட்டி மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது அரிட்டாபட்டியில் சுற்றுலா மற்றும் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.

துணிப்பைகள் பயன்பாடு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழ்நாடு அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் இல்லாத சுத்தமான மற்றும் பசுமையான உயர்நீதிமன்றம்” அமைக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் ஐந்து மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரங்கள் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் குவளை நசுக்கும் இயந்திரங்கள் நிறுவும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி R.மகாதேவன், தமிழக அரசின் சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர்்சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் ஜெயந்தி முரளி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர். அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
தமிழக அரசின் சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர் திருமதி.சுப்ரியா சாஹூ பேசுகையில் :

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வட மாநிலங்களில் கொண்டுவருவதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது தொடர்பாக மதுரை, சென்னை,கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ஆய்வு செய்யப்பட்டு 12கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்ட்டுள்ளது, தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உற்பத்திசெய்யும் 188 தொழிற்சாலைளை மூட உத்தரவிட்டுள்ளோம், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளோம்

மதுரை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரிட்டாப்பட்டி ஆயிரம் ஆண்டு கால வரலாற்று இடம், இந்த அறிவிப்பிற்கு காரணமாக தீர்மானம் முன்னெடுத்த கிராமத்தினருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், அரிட்டாபட்டி பகுதி வரலாறுகளை அடங்கிய பகுதி, சுற்றுல மூலம் வரலாறுகளை தெரிந்துகொள்வதற்கான பகுதி.
அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியை பாதுகாக்க அரிட்டாபட்டி மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, அரிட்டாபட்டி பகுதியில் சுற்றுலா மற்றும் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம் என்றார்.

பேட்டி. திருமதி.சுப்ரியா சாஹூ.- தமிழக அரசின் சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர்
[11/25, 07:04] Sekarreporter 1: திருச்சி மலைக்கோட்டையில்
குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் குகை கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட கோரிவழக்கு.

கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருச்சி சவுந்தராஜன் தாக்கல் செய்த மனு:

திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகை கோயில் உள்ளது. இந்த குகை கோயிலை ஒட்டி கட்டிடம் கட்டப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே குகை கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பல்லவர் குகை கோயில் அருகே உள்ள இடம் ரோசன் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குடோன் கட்டியுள்ளார். அதனால் குகைக் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
என அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் நாட்டின் கலாச்சாரம், கலை, பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பல்லவர் குகை கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆய்வில் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

You may also like...