SEKAR REPORTER

mhc today news Feb 6

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[06/02, 14:40] sekarreporter1: அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021 ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த
மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும், கட்சியின் சட்ட விதிகளின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும்,
தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டுமெனவும் அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை எனவும் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
நிலுவையில் இருந்த
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
மனுதாரர் நேரில் ஆஜராகி உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், சர்வாதிகார முறையில் நடைபெற்றது என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துவிட்டதாகவும், உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தான் தலையிட முடியும் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை என்றும் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் சிவில் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[06/02, 15:15] sekarreporter1: அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021 ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த
மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும், கட்சியின் சட்ட விதிகளின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும்,
தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டுமெனவும் அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை எனவும் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
நிலுவையில் இருந்த
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
மனுதாரர் நேரில் ஆஜராகி உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், சர்வாதிகார முறையில் நடைபெற்றது என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துவிட்டதாகவும், உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தான் தலையிட முடியும் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை என்றும் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் சிவில் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[06/02, 15:15] sekarreporter1: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீரியல் கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்த்து அவரது சகோதரர் ஆட்டோ மோகனும் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதத்து 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக சிறையில் மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி துளசி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

35 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், நன்னடத்தை, முதுமை மற்றும் உடல் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைக்காலமாக அவருக்கு விடுப்பு வழங்க வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரன் ஆஜராகி, மூன்று மாதங்கள் விடுப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், மூன்று மாதங்களுக்கு பதிலாக ஒரு மாதம் விடுப்பு வழங்கலாம் என கூறினார்.

இதனையடுத்து, வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஆட்டோ மோகனுக்கு ஒருமாத காலம் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.
[06/02, 16:00] sekarreporter1: Press News : Quashing of FIR filed by BJP office bearer Ms.Jeyalakshmi against actor cum Lyricist Snekan -Judgement passed today by Justice Tamilselvi court hall 46 item No 56 listed today while Quashing of the FIR against Snekan the court observed that no offence made out against Snekan .

Advocate Sridhar appeared for Snekan and argued that BJP Jayalakshmi had misused the name of Sneham foundation and collected money from public in the name of doing social service .

Already Snekan complaint filed against BJP Jayalakshmi is registered u/s 420 IPC and same is pending enquiry . For more information you can call me .
Lion M Sridhar
Advocate
9841029900
[06/02, 16:37] sekarreporter1: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உத்தரவை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது, திமுக ஆட்சி அமைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற தமிழக அரசு அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தன், இணைப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை. முறைகேடு புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தி, அது முடிவு காண அனுமதிக்க வேண்டுமே தவிர, புலன் விசாரணையை அரசு கைவிட முடியாது. மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றாலும், இணைப்பு மனுதாரருக்கு மாற்று நிவாரண வழிகள் உள்ளன. வழக்கை வாபஸ் பெறுவது அரசின் முடிவு எனக் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஜெயவர்த்தன் இணைப்பு மனுவை ஏற்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[06/02, 17:14] sekarreporter1: [06/02, 17:13] sekarreporter1: Today Sectarariat case at Rskj bench for petitioners senior Advocate Mr P. Wilson, R.Girirajan-intervening petitioner Raghavachari Senior Advocate, for Government -Advocate General Mr PS Raman assisted by Mrs Anitha shanmugam Sgp orders reserved
[06/02, 17:13] sekarreporter1: 🙏🌹
[06/02, 17:21] sekarreporter1: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உத்தரவை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது, திமுக ஆட்சி அமைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற தமிழக அரசு அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தன், இணைப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை. முறைகேடு புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தி, அது முடிவு காண அனுமதிக்க வேண்டுமே தவிர, புலன் விசாரணையை அரசு கைவிட முடியாது. மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றாலும், இணைப்பு மனுதாரருக்கு மாற்று நிவாரண வழிகள் உள்ளன. வழக்கை வாபஸ் பெறுவது அரசின் முடிவு எனக் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஜெயவர்த்தன் இணைப்பு மனுவை ஏற்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[06/02, 17:28] sekarreporter1: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டிசம்பர் 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணையும் நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளதாகவும், எம்.எல்.ஏ. மகன் என்பதால் இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஆய்வாளர் தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் எனவும் வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் இந்த பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கூறிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை சார்பில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீது தீர்ப்பை தள்ளிவைத்திருந்த நீதிபதி எஸ்.அல்லி இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[06/02, 17:50] sekarreporter1: தவறுதலாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு, பின்னர் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழக்கு தொடர்ந்த காவலருக்கு, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது

சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் எஸ்.ராஜாவுக்கு, 6வது சம்பள குழுவின் அடிப்படையில் கடந்த 2009 முதல் 2012வரை ரூ.11,653 சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், 2012 ஜூலை மாதம் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டது. தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதனால் கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.56,363 சம்பளம் தரப்பட்டதாகவும் கூறி, அதை படிப்படியாக பிடித்தம் செய்ய பூந்தமல்லி 13வது பட்டாலியனின் கமாண்டென்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ராஜா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் சம்பளம் எப்படி தவறாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் தர வேண்டும் எனவும், சம்பள பிடித்தம் செய்யும் உத்தரவை பிறப்பித்த 13வது பட்டாலியன் காமாண்டென்ட் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமி நேரில் ஆஜரானார். அப்போது மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறுவதில் இருந்தே தெரிகிறது அவர் மிராட்டப்பட்டுள்ளார் என்றும், மனுதாரருக்கு மட்டும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நீதிமன்றம் அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடரும் என்றும் எச்சரித்தார்.

பின்னர் 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமியிடம், சம்மந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதே போன்ற வேறு யாருக்காவது பிரச்சனை இருந்தால் அதனை உடனடியாக கண்டறிந்து தீர்க்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, தங்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் சம்மன் அனுப்பவேண்டிய சூழல் ஏற்பட்டதால் தான் அனுப்பியதாகவும் காமாண்டென்ட் அய்யாசாமியிடம், நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறிய கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[06/02, 18:23] sekarreporter1: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகி இருந்த இருவரும் ஜனவரி 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மனுவை நீதிபதி அல்லி பிப்ரவரி 2ஆம் தேதி விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீது தீர்ப்பை தள்ளிவைத்திருந்த நீதிபதி இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[06/02, 18:33] sekarreporter1: ஆட்டோ சங்கர் மீதான கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள அவரது சகோதரர் மோகனுக்கு ஒரு மாதத்திற்கு இடைக்கால வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீரியல் கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்ட போது, அவருடன் சேர்த்து அவரது சகோதரர் ஆட்டோ மோகனும் திருவான்மியூர் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதத்து 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், 1988ஆம் ஆண்டு இறுதியில் கைதானது முதல் 35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவன் மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி துளசி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இடைக்காலமாக அவருக்கு விடுப்பு அல்லது இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆட்டோ மோகனுக்கு மூன்று மாதங்கள் விடுப்பு வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், மூன்று மாதங்களுக்கு பதிலாக ஒரு மாதம் வழங்கலாம் என கூறினார்.

இதனையடுத்து, வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஆட்டோ மோகனுக்கு ஒருமாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version