mhc today sep 10 news round up

[10/09, 07:33] sekarreporter1: சென்னை, செப்.10-

உதவி பேராசிரியர்கள் பணி

பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிக்கையை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அறக்கட்டளை வெளியிட்டது. இதற்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த உதவி பேராசிரியர்கள் நியமனத்தை மேற்கொள்ள ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகத்தில் இருந்து நேர்முகத்தேர்வை நடத்த பேராசியரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆனால், சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் நேர்முகத் தேர்வை நடத்த பேராசிரியர்களை நியமிக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பச்சையப்பா அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தபோது, சென்னை பல்கலைக்கழகம் 3 வாரத்தில் பேராசிரியர்களை நியமிப்பதாக உத்தரவாதம் அளித்தது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து ஆகஸ்டு 24-ந்தேதி உத்தரவிட்டார்.

இதன்படி, உதவி பேராசிரியர்கள் பணிக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய 84 பேராசிரியர்கள் பெயரை சென்னை பல்கலைக்கழகம் நியமித்தது.
ஆனால், நேற்று (திங்கட்கிழமை), இன்று (செவ்வாய் கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள இயலவில்லை என்று 62 பேராசிரியர்கள் இமெயில் மூலம் தகவல் தெரிவித்தனர்.
மீதமுள்ளவர்கள் போன் செய்தும் தகவல் தெரிவித்தனர். இதனால், 3 நாட்கள் நடைபெற இருந்து நேர்முகத்தேர்வு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு, பச்சையப்பா அறக்கட்டளை கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அறக்கட்டளை சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், வக்கீல் ஜோதிமணியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நேர்முகத் தேர்வு நடத்த 84 பேராசிரியர்களை சென்னை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. அதில் 62 பேர் தேர்வு நடத்த வர இயலாது என்று இமெயிலும், மீதமுள்ளவர்கள் போனிலும் தகவல் தெரிவித்து ஒருவர் கூட வரவில்லை. அதாவது நேரடியாக உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தை தடுக்க முடியாமல், மறைமுகமாக தடுக்கின்றனர். அதுமட்டுமல்ல பேராசிரியர்கள் சங்கம், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஐகோர்ட்டு உத்தரவை இஷ்டம்போல் விமர்ச்சித்துள்ளனர். இதையெல்லாம் இந்த ஐகோர்ட்டு கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
84 பேராசிரியர்களின் நடவடிக்கை கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது. பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், 84 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவர்களை பணி நீக்கம் செய்யுங்கள். அவர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து இந்த ஐகோர்ட்டில்தான் வழக்கு தொட வேண்டும்.
இவ்வாறு கடும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வை வருகிற 27, 28 மற்றும் 30-ந்தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வை நடத்த பேராசிரியர்கள் செல்வதை பல்கலைக்கழகம் உறுதி செய்யவேண்டும். அதுகுறித்து அறிக்கையை வருகிற 25-ந்தேதி பல்கலைக்கழம் தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
[10/09, 07:34] sekarreporter1: [10/09, 07:34] sekarreporter1: https://youtu.be/8HjCZKJxCkU?si=WMXuAOCAuX-AJf07
[10/09, 07:34] sekarreporter1: 👍
[10/09, 11:00] sekarreporter1: “WP No.19880 of 2024

THE HON’BLE ACTING CHIEF JUSTICE
and
P.B. BALAJI, J.

(Order of the Court was made by the Hon’ble Acting Chief Justice)
The petitioner has filed the writ petition for a Mandamus directing the respondents to remove / demolish all illegal buildings constructed from the bottom of the hill on the slope of the Holy Girivala Mountail in Ward No.3, Survey No.520 measuring am extent of 718 acres 35719 Sq.ft.”
https://sekarreporter.com/the-monitoring-committee-shall-conduct-periodicial-inspection-and-discuss-coordinate-with-the-other-memebers-of-the-monitoring-committee-as-well-as-with-the-members-of-the-committee-constituted-as/#:~:text=WP%20No.19880,35719%20Sq.ft.
[10/09, 12:02] sekarreporter1: சென்னை ரேஸ் கிளப்-புக்கு வைத்த சீலை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

வாடகை பாக்கி 730 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ரேஸ் கிளப்-புக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

குத்தகை ரத்து செய்ததும், காலி செய்ய அவகாசம் வழங்காமல் சீல் வைத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, குத்தகை ரத்து குறித்து கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, கிளப் நுழைவாயில் சீல் அகற்றப்படவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர், கிளப்-புக்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டதாக விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், உத்தரவாதத்தை மீறியிருந்தால் அதுசம்பந்தமாக தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும், முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர்.
[10/09, 12:37] sekarreporter1: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கில், முன்னாள் துணை சபாநாயகர்
பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் தன் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி அவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொள்ள்ச்சி ஜெயராமன், சாட்சியம் அளிக்க மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து, மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு பொள்ளாச்சி ஜெயராமன் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குறுக்கு விசாரணை செய்தார்.

குறுக்கு விசாரணை நிறைவடையாததால், விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
[10/09, 13:04] sekarreporter1: சேலம் சித்தேஸ்வர சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிய மனு மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பகுதியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் கஞ்சமலை அமைந்துள்ளது.

இங்கு சித்தர்கள் சிவனை வழிப்பட்ட சித்தேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இத்திருக்கோவிலுக்கு தினந்தோறும் மட்டுமல்லாமல் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பகதர்கள் வருகை தந்து இங்குள்ள சிறிய அருவிகள், நீருற்றுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப முறையான போக்குவரத்து வசதி, தங்குமிட வசதிகள், உடை மாற்றுவதற்கான வசதிகள் இல்லை என்றும் கோவிலை தூய்மையாக பராமரிப்பதில்லை எனவும் சேலத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி திருக்கோவிலை பாதுகாப்பு, பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கடந்த 2015 ம் ஆண்டு முதல் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சேலம் சித்தேஸ்வர திருக்கோவிலை பாதுகாத்து, அங்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அளிக்கப்பட்ட மனு மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
[10/09, 13:08] sekarreporter1: நீதிபதி தண்டபாணி, சேலம் சித்தேஸ்வர திருக்கோவிலை பாதுகாத்து, அங்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அளிக்கப்பட்ட மனு மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார். https://sekarreporter.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/
[10/09, 13:45] sekarreporter1: சென்னை,

சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங் ‘ போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[10/09, 14:12] sekarreporter1: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம், மறுத்து விட்டது.

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி, தற்போது அதிமுக-வில் நிர்வாகியாக உள்ள பாஜ முன்னாள் நிர்வாகி நிர்மல் குமார், ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தபாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், நிர்மல்குமார் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டிருந்தார் .

இந்த உத்தரவை எதிர்த்து நிர்மல்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வு, ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, 2023ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
[10/09, 14:51] sekarreporter1: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவர்.

இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னனி தமிழ் நடிகராக உள்ளார்.

சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர்.

ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
[10/09, 16:43] sekarreporter1: தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசகுமார் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பழனியப்பன் தாக்கல் பொது நல மனுவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 2023 திருத்தங்களை அரசு கொண்டு வந்து கடந்த ஜனவரி மாதம் அதனை அமல்படுத்தியது. அதில் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அங்கீகாரம் என்பது நிரந்தரமாக இல்லாமல் குறிப்பிட்ட கால வரம்பிற்கு மட்டும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளிகள் சட்டத்தில் இல்லாததை விதிகளில் அரசு கொண்டுவந்துள்ளது. அங்கீகாரம் என்றால் அது நிரந்தரமானது தான் தற்காலிகமானது அல்ல. தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கவும் செயல்படாமல் இருப்பதை தடுப்பதற்கும் புதிய விதியை கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தாலும் தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறுவதற்கு ஏற்கனவே உள்ள சட்டத்தில் இடம் உள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசாணையில் நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அரசாணைப்படி இதுவரை நிரந்தர அங்கீகாரம் வழங்காமல் தற்காலிக அதிகாரம் மட்டுமே அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அந்த அரசாணை தொடர்பான வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது.

தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் முற்றிலும் சட்டவிரோதமானது தன்னிச்சையானது மேலும் புதிய விதிகளின்படி தனியார் பள்ளிகள். தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்கு அரசு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி, மற்றும் பல்வேறு நிபந்தனை விதித்துள்ளது. இது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசின் இந்த புதிய விதியை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்த தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை நான்கு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.
[10/09, 17:03] sekarreporter1: சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருச்சி மகளிர் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தனது தாய் மைதிலியை வேலூருக்கு மாற்ற கோரி அவரது மகள் சரண்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கைதியிடம் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு சிலைக்கு மாற்ற முடியாது என்றும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறைக்கு போதை பொருள் எப்படி வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சிறையில் கைதிகளுக்கு வசதிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக சுட்டிக் காட்டினார்.

கைதிகளை பாரபட்சமாக நடத்துவதால் சிறைக்குள் பிரச்சினை ஏற்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டப்படி அனைத்து கைதிகளையும் சமமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

சிறைக்குள் குற்றங்களில் ஈடுபடும் கைதிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று தெளிவு படுத்திய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/09, 17:19] sekarreporter1: சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர்.

அப்போது காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சதீஷின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்க, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.
[10/09, 21:58] sekarreporter1: 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2022 ம் ஆண்டு 5,413 குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த சத்தியா என்பவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டில் தனது பெயரையும் சேர்க்கக் கோரியிருந்தார்.

ஆனால், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியதால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சத்தியா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர் 11 ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பள்ளியில் படித்த போதும், குடும்ப சூழல் காரணமாக 12 ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக தமிழ் வழியில் எழுதியிருக்கிறார். தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழும் பெற்றிருக்கிறார் என்பதால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற அவருக்கு தகுதி உள்ளது என உத்தரவிட்டார்.

ஏற்கனவே திருப்பூரில் ஊரக வளர்ச்சித் துறை உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நியமன உத்தரவு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[10/09, 21:59] sekarreporter1: கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து, வருவாய் ஈட்டும் வகையில் கலாச்சார மையம் கட்டப்படுவதாகவும், இதை முடக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், பசுமை வழிச்சாலையில் காலியாக உள்ள கோவில் நிலத்தில் கலாச்சார மையமும், சிலைகள் பாதுகாப்பு மையமும், ஆன்மீக நூலகமும் கட்டப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், கோவில் நிதியில் கட்டப்படும் கலாச்சார மையம் மூலம் கிடைக்கும் வருமானம் கோவிலுக்கு தான் செல்லும் என்பதால், கட்டுமானத்தை நிறுத்தி வைத்த உத்தரவை நீக்கி, கட்டுமானத்தை தொடர அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில்மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/09, 22:19] sekarreporter1: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர் , கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட பத்து ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதல்வர் அனுமதி வழங்கி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாக சுட்டிகாட்டியுள்ளனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, ஆயுள் தண்டனை கைதிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் ஒப்புதல் அளித்தபின்பு தகுந்த காரணங்களை கூறாமல் தமிழக ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்தனர்.

மீண்டும் இந்த கோப்புகளை தமிழக அரசு எட்டு வாரத்திற்குள் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...