SEKAR REPORTER

Not satisfied என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை dkj bench சரமாரி கேள்வி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ண குமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை படித்த நீதிபதிகள் அது தொடர்பாக தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் பள்ளி எப்படி இதற்கு அனுமதி கொடுத்தது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்டப்பணிகள் ஆணைய அறிக்கையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பொற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினார்.

போலி என்.சி.சி. முகாமில் இருந்த சிவராமனிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும்
இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என சிவராமன் மிரட்டியிருக்கிறார் எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், சிவராமனை பள்ளி நிர்வாகத்துக்கு அறிமுகப்படுத்தியபுவன் என்ற நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை எனக்கூறிய நீதிபதிகள் சிவராமனின் பின்னணி, ஆயுதங்கள் எப்படி கொண்டு செல்லப்பட்டன உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக அரசை பாராட்டுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் வாதிட்டனர்.

அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், நான்கு மாணவிகளும் பெற்றோர்கள் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம் என கூறியதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது, இனி இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது எனவும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பக்கம் தான் நாங்களும் நிற்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முகாமில் இருந்த போது பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரும் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறினார்.

போலி என்.சி.சி. சான்றிதழ் மூலம் சிவராமன் தான் பள்ளிகளை அணுகியுள்ளதாகவும்
இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போலி என்.சி.சி. முகாம் நடத்திய மற்ற பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
முகாமில் பங்கேற்க மாணவர்களிடம் 1500 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் பணத்திற்காக தான் இந்த சம்பபம் நடந்துள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சிவராமன் எலி மருந்து உட்கொண்டதாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கான இழப்பீட்டை வழங்க தனியார் பள்ளிக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இது குறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version