Richardson Wilson, Additional Government Pleader appearing for the State submitted that the liability to pay entry tax has already been settled by the Hon’ble Supreme Court and the Madras High Court. In fact in the very same Petitioner’s case, for an earlier import of a rolls Royce the High Court upheld liability to pay tax

 

 

BMW X5 காரை இறக்குமதி செய்ய நுழைவு வரி செலுத்தத் தவறியதற்காக அபராதம் மற்றும் நுழைவு வரி விதிப்பதை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. .

மனுதாரர் தரப்பில் ஆஜரான திரு. ஜெயபிரதாப், தான் வரியை செலுத்திவிட்டதாகவும், ஆனால் அவர்கள் அபராதம் விதிப்பதை மட்டுமே சவால் செய்வதாகவும் கூறினார்.

Richardson Wilson, Additional Government Pleader appearing for the State submitted that the liability to pay entry tax has already been settled by the Hon’ble Supreme Court and the Madras High Court. In fact in the very same Petitioner’s case, for an earlier import of a rolls Royce the High Court upheld liability to pay tax.

After hearing both sides, the Hon’ble Court directed the government to file all the previous case laws on the subject including the petitioner’s cases. The Hon’ble Court adjourned the case to Tuesday and in the meanwhile directed the department not to take coercive steps against the petitioner. The Hon’ble Court has also posted other similar cases along with this case including a case filed by Mr. Harris Jeyaraj and Adyar Gate Hotels Ltd.

 

 

 

நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிம்டபிள்யூ எக்‌ஸ் 5 என்ற சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிகவரித் துறை அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்த தை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் எனவே அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கின் சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்தவரை அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞர் வில்சனுக்கு உத்தரவிட்டார்.

You may also like...