Sc reservation case
[3/6, 13:37] Supremecourt Advt Gs Mani: பொருளாதாரத்தில் பின்தங்கிய எந்தவித இட ஒதுக்கீடு சலுகைகளும் பெறாத உயர்சாதி மற்றும் இட ஒதுக்கீடு சலுகை ஏற்படாத இஸ்லாமிய கிறிஸ்துவ சமூகத்தினருக்கு மத்திய அரசு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் கொண்டு வந்திருந்தது. அந்த சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்தி இருந்தது ஆனால் தமிழக அரசு மட்டும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல் படுத்தாமல் பிறந்தது. இந்த 10 சதவீத இட ஒதிக்கீடு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார் அந்த மனுவில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசு தனது பதில் மனுவில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை தற்போதைக்கு அமல்படுத்த முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகும் மத்திய அரசு தலையிட முடியாது என்று சொல்லியிருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போது தமிழக அரசு தனது பதில் மனுவில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்றும் மத்திய அரசு தனது பதில் மனுவில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது சம்பந்தமாக தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த இரண்டு பதில் மக்களுக்கும் மனுதாரர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி பதில் விளக்கம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் கோரியதை அடுத்து. உச்சநீதிமன்றம் மனுதாரர் ஜிஎஸ் மணி அவர்களுக்கு 4 வரை கால அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித்து வழக்கை நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் இந்த வழக்கு 4 வார காலத்திற்கு பிறகு விசாரணைக்கு வர இருக்கிறது.
[3/6, 13:39] Sekarreporter 1: 🌱