Sekarreporter1: [11/14, 15:02] Murugavel Advt Admk: அன்புடையீர் வணக்கம், நீதித்துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்லது தேவையில்லாத அரசியல் தலையீடு இருப்பதாக தற்சமயம் நடக்கின்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

[11/14, 15:07] Sekarreporter1: [11/14, 15:02] Murugavel Advt Admk: அன்புடையீர் வணக்கம்,

நீதித்துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்லது தேவையில்லாத அரசியல் தலையீடு இருப்பதாக தற்சமயம் நடக்கின்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நீதித்துறையில் நீதி அரசர்களின் நியமனம், நீதி அரசர்களின் பணியிடமாறுதல், நீதி அரசர்களின் பதவி உயர்வு போன்ற அனைத்துமே முதல் படியாக உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும், கொலிஜியத்தின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிகழ்வு.

இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக பணிபுரிந்த மாண்புமிகு நீதியரசர் சஞ்சீப் பானர்ஜி அவர்களை பணியிட மாற்றம் செய்திருப்பது உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் நடை முறைக்கு உட்பட்டது ஆனால் இந்த பணியிடமாற்றம் தற்போது அரசியலாக்கப்படுவதாக நான் உணர்கிறேன். காரணம் தற்போது பணி அமர்த்தப்பட்டு இருக்கக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிஅரசர் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலா அல்லது இங்கிருக்கக்கூடிய சில அரசியல் இயக்கங்கள் தாங்கள் எண்ணியதுதான் நடக்கவேண்டும் என்பதாலா என்ற ஒரு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மாண்புமிகு நீதியரசர் திரு. சஞ்சீப் பேனர்ஜி பணியிடமாற்றம் செய்திருப்பதை ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவதும், இந்த பணி இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முனைவதும், ஒருசில அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் இந்த பணி இடமாற்றத்திற்கு எதிராக அறிக்கை விடுவதும் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாக நான் பார்க்கிறேன். காரணம் இதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக இருந்த மாண்புமிகு நீதியரசர் திருமதி தகில் ரமணி இதே மேகாலயா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது இதுபோன்ற கண்டன குரல்களும், கையெழுத்து இயக்கமும், அரசியல் தலைவர்களின் அறிக்கைகளும் வறவில்லை மாறாக தற்போது நீதியரசர் சஞ்சீப் பேனர்ஜி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு இதுபோன்ற கண்டனக் குரல்கள் எழுவது மிகப்பெரிய அரசியல் உள் நோக்கத்தையும், நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் நான் பார்க்கிறேன்.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட நீதியரசர் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாத போது ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்களும், அரசியல் இயக்கங்களும் இதுபோன்ற நிகழ்வில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.

உச்சநீதிமன்ற உத்தரவின் மீது ஐயம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்புக்கு உரியதாக கருதப்படும் அதேபோல 75 நீதிபதிகள் பணியாற்றும் மாநிலத்திற்கு தான் தலைமை நீதிபதியாக இருப்பேன் என்றும் இரண்டு மூன்று நீதிபதிகள் பணியாற்றும் மாநிலத்திற்கு தலைமை நீதிபதியாக பணியாற்ற செல்லமாட்டேன் என்றும் எந்த நீதியரசரும் சொன்னதாக வரலாறு இல்லை, தற்போது தன்னிச்சையாக இவர்கள் செய்யும் இந்த நிகழ்வுகள் மாண்புமிகு நீதியரசர் திரு. சஞ்சீப் பானர்ஜியை சிறுமைப்படுத்தும் விதமாக இருப்பதாக நான் அறிகிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் நீதித்துறைக்கு விடும் சவாலாக நான் பார்க்கிறேன், ஆளுகின்ற ஆட்சியாளர்கள் விரும்புகின்ற நீதிபதிகள் தான் நீதிமன்றங்களில் பணியாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாக்க முனைகின்ற, இதுபோன்ற தீய சக்திகளை நீதித்துறை தன்னுடைய இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் படி judiciary, legislative, administrative இந்த மூன்று system ம் தனித்தனியாக ஒரு துறை இன்னொரு துறையின் மீது ஆதிக்கம் செலுத்தா வண்ணம் தன்னுடைய பணியை நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும், தற்போது நிகழ்ந்திருக்கக் கூடிய இந்த பணியிடமாற்றம் அதைத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் போன்றவை ஏதோ அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நான் அறிகிறேன்.

வழக்கறிஞர் என்ற முறையில் இதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவரவர் அவரவர்களுடைய எல்லைக்குள் இருந்து பணியாற்ற வேண்டும் நானும் என்னுடைய எல்லைக்குள் இருந்து ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் இந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டுவது என்னுடைய பொறுப்பாக நான் உணர்கிறேன்.

அன்புடன்,
ஆர்.எம். பாபு முருகவேல், பி.ஏ., பி.எல்.,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர்.
[11/14, 15:06] Sekarreporter1: 👍🏾
[11/14, 20:51] Murugavel Advt Admk: https://tamil.oneindia.com/news/chennai/lawyer-babu-murugavel-statement-about-the-transfer-of-judge-sanjib-banerjee-438958.html

You may also like...