Sivakumar Mhc Advocate: நடிகர் சசிகுமார் நடித்து மந்திரமூர்த்தி என்பவர் இயக்கி ட்ரைடன்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியான “அயோத்தி” படம் வெளியிட மாட்டோம.
[3/30, 11:40] Sivakumar Mhc Advocate: நடிகர் சசிகுமார் நடித்து மந்திரமூர்த்தி என்பவர் இயக்கி ட்ரைடன்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியான “அயோத்தி” என்ற தமிழ் திரைப்படத்தின் திரைக்கதை தான் எழுதி தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் 2020ஆம் ஆண்டு “யாதும் ஊரே”என்ற தலைப்பில் பதியப்பட்ட திரைக்கதையை தனது அனுமதி இல்லாமல் திருடி காப்பிரைட் உரிமை மீறல் செய்துள்ளனர் என்றும் ‘அயோத்தி’ படத்தின் திரைக்கதை உரிம்ம் தனக்கு சொந்தமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் நாளை 31-3-2023 ஓ டி டி யில் வெளியாக இருப்பதையும் பிற மொழிகளில் டப்பிங் செய்வதையும் தடை செய்ய வேண்டும் என்று கோரி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதியரசர் திரு. எஸ்.சௌந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே கேவியெட் மனு தாக்கல் செய்திருந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி வரை ஓ டி டீ யில் அயோத்தி திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தார். அதை பதிவு செய்த நீதிபதி வழக்கில் சம்பந்தப்பட்ட Zee5 உள்ளிட்டஅனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் L.சிவகுமார் ஆஜரானார்.
[3/30, 11:56] sekarreporter1: .