Tasmac நீதிபதிகள் சதீஷ்குமார்,பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது…

வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார்,பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தனர் இதையடுத்து நீதிபதிகள் அப்படியானால் இந்த திட்டத்தை ஏன் தமிழகம் முழுவதும் அமல்படுத்த கூடாது என்ற கேள்வியை முன் வைத்தனர் . மாவட்ட ஆட்சியரும் டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற் கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவித்தனர். தற்போதுதான் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 30ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

You may also like...