அகில இந்திய தனியார் பள்ளிகள் தலைவர் பி.டி அரச குமார் சார்பாக அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த மனு

தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிட அனுமதி மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை செய்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தனியார் பள்ளிகள் தலைவர் பி.டி அரச குமார் சார்பாக அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் பிறகு பள்ளிகளின் கட்டிடங்கள் மட்டுமின்றி கூடுதலான கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அதற்கான விண்ணப்பத்தை நகர்ப்புற திட்டமிடல் துறை இயக்குனரிடம் அளித்து அனுமதி பெற வேண்டும்.இல்லாவிட்டால் பள்ளியின் அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் அந்த விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிப்படுவதாக மனுவில் தெரிவித்திள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில்,மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி, பள்ளிக்களில் கூடுதல் கட்டிட அனுமதியை பெற ஆன்லைனிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். நேரில் விண்ணப்பங்கள் பெறபடுவதில்லை அதே வேளையில் ஆன் லைனிலும் விண்ணப்பங்கள் ஏற்கபடாமல் நிரகாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் அளித்த விண்ணப்பத்தின் மீது
3 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க அரசின் நகர்ப்புற திட்டமிடல் துறைக்கும், தனியார் பள்ளிக்கல்விதுறை இயக்குனருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

You may also like...