அசல் ஆவணங்களை சரிபார்க்காமல் புதுச்சேரி உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்*, *பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து*; *அதனைத் தொடர்ந்து*, *திருமணப் பதிவு சான்றிதழில் பெற்றோரின் பெயரை திருத்தங்கள் செய்ய, திருமணப் பதிவாளருக்கு உத்தரவிடக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!* *திருமணப் பதிவாளர் சார்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆர்.பி.முருகன்ராஜா ஆஜரானார்கள்.*

*அசல் ஆவணங்களை சரிபார்க்காமல் புதுச்சேரி உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்*, *பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து*; *அதனைத் தொடர்ந்து*,
*திருமணப் பதிவு சான்றிதழில் பெற்றோரின் பெயரை திருத்தங்கள் செய்ய, திருமணப் பதிவாளருக்கு உத்தரவிடக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!*

*திருமணப் பதிவாளர் சார்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆர்.பி.முருகன்ராஜா ஆஜரானார்கள்.*

புதுச்சேரி உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், புதுச்சேரியில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து; அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த
திருமணப் பதிவு சான்றிதழில் பெற்றோரின் பெயர்களை திருத்தம் செய்ய, திருமணப் பதிவாளருக்கு உத்தரவிடக்கோரிய மனுவினை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள் புதுச்சேரி உரிமையியல் நீதிபதியிடமிருந்து அறிக்கை பெற்று; அதனை சரிபார்த்த நீதிபதி, சிவில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு, அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும்; எனவே, சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி திருமணப் பதிவு சான்றிதழில் பெற்றோரின் பெயரை திருத்தங்கள் செய்ய உத்தரவிட முடியாது என்றும்; இது போன்ற மனுக்களில், French Codeன் படி, புதுச்சேரி சிவில் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, முழுமையான விசாரணை நடத்தி, அசல் ஆவணங்களைப் பார்வையிட்டுதான் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் (Addl.Advocate General)ஆர்.நீலகண்டன், தமிழ்நாடு இந்து திருமணப்பதிவு விதிகள் படி, திருமணப் பதிவு சான்றிதழில், பதிவுத்துறை தலைவர் (Inspector General of Registration) உத்தரவின் அடிப்படையில் தான், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று உள்ளதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனையும் பதிவுசெய்த *நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள்* மனுதாரர் திருத்தங்கள் கோர ஆதரவாக உள்ள, ஆவண ஆதாரங்களுடன் உரிய நீதிமன்றம் / உரிய அலுவலரை அணுக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

*அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்* *(Addl.Advocate General)* *ஆர்.நீலகண்டன் அவர்களுக்கு உதவியாக, அரசு வழக்கறிஞர் ஆர்.பி.முருகன்ராஜாவும் ஆஜரானார்.*

You may also like...