அதிமுக வழக்குதனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்பட 4 பேரும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் பரபரப்பு தீர்ப்பு

[8/25, 20:43] sekarreporter1: கடந்தாண்டு ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்து இருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்பட 4 பேரும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே நடந்தது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘‘ இந்த வழக்குகளில் தங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை எனில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறவி்ல்லை. தாம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை இபிஎஸ் தரப்பால் தடுக்க முடியாது. எனவே இபிஎஸ் பொதுச்செயலாளராக செயல்பட தடை விதிக்க வேண்டும், என கோரப்பட்டிருந்தது.
அதேபோல இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாத்தில், ‘‘ ஓபிஎஸ் உள்பட 4 பேரையும் கட்சியை விட்டு நீக்கி கடந்த 2022 ஜூலை 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 8 மாதங்களாக மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர எந்த உரிமையும் இல்லை. அதேபோல 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், அந்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகிறது. அதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. எனவே காலதாமதமாக தொடரப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல, என கூறப்பட்டு இருந்தது.
அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஜூன் 28 அன்று தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘ அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும். அதேபோல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்களை கட்சியை விட்டு நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க முடியாது. இதர பிற கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகிறது எனக்கூறி தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
[8/25, 20:52] sekarreporter1: சென்னை, ஆக.26-

சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 23-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், 2022-ம் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கூறியுள்ளது. அந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பிரதான வழக்கின் கோரிக்கையாக உள்ளது. எனவே, இந்த தீர்மானங்களுக்கு தடை விதிக்க முகாந்திரம் எதுவும் இல்லை.
ஒருவேளை இடைக்கால தடை வழங்கினால், பிரதான வழக்கின் முக்கிய கோரிக்கையை இப்போதே நிறைவேற்றியதாகி விடும். அதனால், இடைக்கால தடை விதிக்க முடியாது. ஆகவே, இடைக்கால தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவை உறுதிப் படுத்துகிறோம்.
பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், ஜூலை 11 2022-ம் ஆண்டுக்கு முந்தைய நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்பட்டால், கட்சி தலைமை இல்லாத நிலைக்கு தள்ள நேரிடும்.
இதனை அனுமதிக்க முடியாது. பொதுச் செயலாளர் தேர்வை பொருத்தவரை, ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒற்றை தலைமையை கொண்டு வரும் வகையில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை தற்போதையை நிலையில் முடக்க முடியாது.
மேற்முறையீட்டு மனுதாரர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிராக எந்த ஒரு இடைக்கால தடையும் இல்லாத நிலையில், அவர்கள் கேட்டுக் கொண்டதன்படி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்காக சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஆகவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை நீக்கிய தீர்மானங்களுக்கு தடை விதிக்க முகாந்திரம் நிரூபிக்கப்படவில்லை.
இடைக்கால தடை பெறுவதற்கு மேல்முறையீடு மனுதாரர்கள் உரிமை எதுவும் இல்லாத நிலையில், அவர்கள் இடைக்கால தடை கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.
…………….

You may also like...