அப்பாவு தரப்பு வழக்கறிஞரை குறுக்கிட்ட நீதிபதிகள் மேலும் கால அவகாசம் வழங்க இயலாது என்றதுடன் தற்போது ராதாபுரம் தொகுதியில் அடுத்த தேர்தல் முடிந்து விட்டதால் வழக்கினை சட்டரீதியாக தொடர்ந்து விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் அப்பாவு தரப்பு பதிலளிக்குமாறு கேட்டும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர். [7/29, 10:15] Sekarreporter1:

[7/29, 10:13] Inbadura Former i Mla: *ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை வழக்கு!*

*வாய்தா கேட்ட அப்பாவு வழக்கறிஞர்!*

*அடுத்த வாரம் வழக்கு விசாரணை நடைபெறும்−நீதிபதிகள் கண்டிப்பு!*

 

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை
தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான பெஞ்ச் முன்பாக மீண்டும் நேற்று (28.7.22) விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்தல் அதிகாரியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 வாக்குகளுடன் சேர்த்து கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் திரும்ப எண்ணும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதி மன்ற உத்தரவின்படி மீண்டும் மூன்று சுற்று வாக்குகளை எண்ணியதில் இன்பதுரையே வெற்றி பெற்றார்.

ஆனால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள் நடுநிலைப்பள்ளி ஆசிரியரால் அட்டஸ்டட் செய்யப்பட்டவை.அவர்கள் கெசட்டட் அதிகாரிகள் அல்ல! எனவே அவர்கள் அட்டஸ்டட் செய்த 203 வாக்குகள் செல்லாது என்பதால்தான் கடந்த தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அப்போது அறிவித்தது.எனவே அந்த 203 ஓட்டுகள் செல்லும் வாக்குகளா? இல்லை செல்லாதவையா? என்பதை உச்சநீதிமன்றம்தான் முடிவுசெய்யவேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கேட்டதுடன் தங்கள் தரப்பில் வாதிட மேலும் கால அவகாசம் தருமாறும் கேட்டார்.
அப்போது அப்பாவு தரப்பு வழக்கறிஞரை குறுக்கிட்ட நீதிபதிகள் மேலும் கால அவகாசம் வழங்க இயலாது என்றதுடன் தற்போது ராதாபுரம் தொகுதியில் அடுத்த தேர்தல் முடிந்து விட்டதால் வழக்கினை சட்டரீதியாக தொடர்ந்து விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் அப்பாவு தரப்பு பதிலளிக்குமாறு கேட்டும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[7/29, 10:15] Sekarreporter1: 🌹

You may also like...