அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்கள்

#Read_Full_news

செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை வந்தது

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில்

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்கள்

👉🏼 செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது

👉🏼உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான்

👉🏼அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது என தங்கள் தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்கிறோம்

👉🏼சட்டப்பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

👉🏼உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியும் வாதங்கள் வைத்தார்

👉🏼செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது

👉🏼அதற்கு காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும்

👉🏼வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்

👉🏼அதை அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார்

👉🏼சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நக்கீரன் கோபால் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டி காட்டினார்

👉🏼நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான்

👉🏼நீதிமன்ற காவல் முழுமையாக சட்டவிரோதமாகவோ இயந்திரத்தனமாகவோ இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது; விசாரணைக்கு ஏற்கக் கூடியது

👉🏼உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது

👉🏼செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தோம்

👉🏼மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதன்மை அமர்வு நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைத்து இயந்திரத்தனமாக உத்தரவிட்டார்

👉🏼நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த எங்கள் தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது

👉🏼13ம் தேதி இரவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது

👉🏼குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்

👉🏼இந்த பிரிவு தங்களுக்கு பொருந்தாது என அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்படுகிறது

👉🏼உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு கூற முடியாது

👉🏼அந்த பிரிவை அமலாக்கப் பிரிவு பின்பற்ற வேண்டும்

👉🏼குற்ற விசாரணை முறைச் சட்ட பிரிவை பின்பற்றாதது அடிப்படை உரிமையை மீறியது என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது

👉🏼இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் முதல் முறை

👉🏼ஜூன் 14 அதிகாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கப் பிரிவு தான்

👉🏼அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும்

👉🏼உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட முதல் 15 நாட்களுக்கு பிறகு காவலில் வைத்து விசாரிக்க எந்த காரணத்துக்கும் அது சுனாமியாக இருந்தாலும் சரி, கொரோனாவாக இருந்தாலும் அனுமதிக்க முடியாது

👉🏼 சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு காவல் துறையினரின் அதிகாரம் வழங்கப்படவில்லை

👉🏼அதனால் அமலாக்கப் பிரிவு எப்படி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர முடியும்

👉🏼ஆனால் அமலாக்கப் பிரிவுக்கு காவலில் வைத்து விசாரிக்க சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை

@nrelango_dmk
#senthilbalajicase #Nrelango_arguments

You may also like...