அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் மாதம் ஆறாம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் மாதம் ஆறாம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் மாதம் ஆறாம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

You may also like...