அரக்கோணம் தேர்தல் வேட்பாளர் யார்.?

வருகின்ற ருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி “வேலூர்”. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின் வெற்றி ?யாக உள்ளது என பல்வேறு ஊடகங்களின் சர்வேக்கள் மூலம் வெளிப்படையாக தெரிந்தது. அதை கவனத்தில் கொண்டு அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகத்ரட்சகனை வேலூரில் போட்டியிட செய்வதன் மூலம் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளலாம் என திமுக தலைமை மிக சாதுரியமாக இந்த முடிவினை எடுத்துள்ளது. அரக்கோணம் தொகுதியில் பொறுப்பாளராக இருக்கும் ராணிப்பேட்டை காந்தி அவர்கள் தனக்கு சரியாக முக்கியத்துவம் தரவில்லை என்றும் பல்வேறு தருணங்களில் உதாசீனம் செய்தார் என்ற காரணத்தினாலும் ஜெகத்ரட்சகன் அவர்கள் தலைமையின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே தற்போது உள்ளார் என தெரிகிறது.

இந்த நிலையில ஆற்காடு ஏவி சாரதி பற்றி விசாரிக்கும்போது அவர் பொதுவாகவே வியாபாரத்தில் மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் சாதுரியமாகவும் பல அணுகுமுறைகளை கடைப்பிடித்து தனது சொந்த உழைப்பிலேயே மிக சிறிய இடத்தில் இருந்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி அமைத்தவர் என்று தெரிகிறது. அதே போல அதே நுணுக்கத்தோடு அரசியல்லையும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பல வெற்றிகளை தேடி தந்தவர். உதாரணமா கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் பொறுப்பேற்ற ஒரே காரணத்தினால் ஆற்காடு நகராட்சியில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 23 வார்டுல திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என அந்தப் பகுதியில் இருக்கிற கட்சியைக்காரர்களும் மக்களும் வெளிப்படையாக பேசுகிறார்கள். இது இல்லாத இவரோட இந்த துணிச்சலான பல முன்னெடுப்புகளால திமுகவிற்கு கிடைச்ச வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத பாஜக அரசு இவரு மேல அமலாக்கத்துறையையும் ஈடியையும் ஏவி இவரை பயமுறுத்தி இருக்காங்க. ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், தனது கணக்குகள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று நிரூபித்து அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இப்பகுதியில் மிகப்பெரும் பலமாகவும் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வருகிறார். கொரோனா நோய் தாக்கிய சமயத்தில் பல்வேறு நல திட்டங்களும், உதவிகளும் வழங்கியது மட்டுமல்லாது பொதுவாகவே தேவை என்று இவரிடம் அணுகும் கழகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் மிகவும் நேசிக்கும் நபராக இருக்கிறார்.

எனவே இவ்வாறு சுழல் இருக்கும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

You may also like...