ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர் , கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட பத்து ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதல்வர் அனுமதி வழங்கி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாக சுட்டிகாட்டியுள்ளனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, ஆயுள் தண்டனை கைதிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் ஒப்புதல் அளித்தபின்பு தகுந்த காரணங்களை கூறாமல் தமிழக ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்தனர்.

மீண்டும் இந்த கோப்புகளை தமிழக அரசு எட்டு வாரத்திற்குள் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...