ஆர். எம். பாபு முருகவேல்,கழக செய்தி தொடர்பாளர்,கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்.

கடந்த 21. 11. 2023 அன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த பிறகு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்று தெரியாமல் இருந்ததாகவும், 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அந்தக் கருத்தை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலினிடத்தில் சொன்னதாகவும், திரு. ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பொதுவெளியில் பேசியிருந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது புது வாழ்வில், அடித்தட்டு மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுகிற இயக்கம் அஇஅதிமுக 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் அதிமுக, அது போன்ற இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாகவும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாகவும் திரு. அப்பாவு அவர்களின் பேச்சு இருந்திருக்கிறது, இது அப்பட்டமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அஇஅதிமுக கட்சிக்கும், அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாக அமைந்திருக்கிறது.

அவரின் இத்தகைய பேச்சானது அன்றைய மறுதினம் பெரும்பாலான சமூக வலைத்தளங்களிலும், பெரும்பாலான தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது, இது செய்தியாகவும் அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலையும், நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு அஇஅதிமுகவின் செய்தி தொடர்பாளர் என்ற முறையிலும், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் என்பதன் அடிப்படையிலும், அஇஅதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையிலையும் திரு. அப்பாவு அவர்களுக்கு விளக்கம் கேட்டும், அவர் சொன்ன அந்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும், மானநட்டமாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பி இருந்தது ஆனால், வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொண்ட திரு. அப்பாவு எந்த விதமான பதிலும் தராமலும், சொன்ன கருத்தை திரும்பவும் பெறாமலும் இருந்ததன் அடிப்படையில் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் மீது மானநட்ட வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அந்த வழக்கு அங்கு கோப்புக்கு எடுக்காத நிலையில் அதன் மேல்முறையீடாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் அங்கும் கோப்புக்கு எடுக்கப்படாத சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய உத்தரவை பெற்று நேற்று மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது நான் நேரில் ஆஜராகி என்னுடைய பிரமாண வாக்குமூலத்தை பதிவு செய்தேன்.

பிரமாண வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு அந்த வழக்கிற்கான வழக்கு எண் CC. No. 17/2024 என்று எண் கொடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து வழக்கை வருகின்ற 7. 8. 2024 க்கு ஒத்தி வைத்து மேலும் திரு. அப்பா அவர்களுக்கு அழைப்பானை அனுப்பவும் உத்தரவிட்டிருக்கிறது.

தகவலுக்காக,
ஆர். எம். பாபு முருகவேல்,
கழக செய்தி தொடர்பாளர்,
கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்,
கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்.

You may also like...