ஈஷா case chief justice bench order isha case

கோவை ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களை கட்டுவதற்காக உரிய அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தொடர்ந்திருந்த வழக்கில், ஈஷா யோகா மையம் சார்பில், 112 அடி உயர சிவன் சிலையும், அதை சுற்றி ஒரு லட்ச்ம் சதுர அடியில் கார் பார்க்கிங், நான்கு மண்டபங்களும், பூங்கா உள்ளிட்ட கட்டுமானங்களை சட்டத்திற்கு புறம்பாக, மலை பகுதி பாதுகாப்பு விதிகளை மீறி ஈஷா யோகா மையம் கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது.
சிலை அமைக்கவும், 300 சதுர மீட்டர் பரப்புக்கு விளைநிலங்களை மாற்ற மட்டும் மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். இதை மீறி ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. இந்த கட்டுமானங்களுக்கு மலை பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் அனுமதியோ, வனத்துறையின் அனுமதியோ, சுற்றுச்சூழல் அனுமதியோ, நகர ஊரமைப்பு திட்ட அதிகாரி அனுமதியோ பெறவில்லை. தவிர நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியான இங்கு ராஜ வாய்க்கால் கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றம்டாட்டியிருந்தார். அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறி, அவற்றிற்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

2017ல் தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், 08.10.2016, 15.02.2017 ஆகிய தேதிகளில் 19.45 ஹெக்டேர் விளை நிலத்தை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதாகவும், இந்த அனுமதியானது மத வழிபாடு மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கரை பூலுவம்பட்டியில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி ஈஷா சார்பில் விண்ணப்பித்தனர் என்றும், அவற்றை பரிசீலித்த மாவட்ட ஆட்சியரும், தீயணைப்பு துறையும் அனுமதி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மலைப்பகுதி பாதுகாப்பு குழு, வனத்துறை, வேளாண்துறை, மண்ணியல் மற்றும் சுரங்க துறை ஆகியவற்றிடமும் அனுமதி வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தது.

ஈசாவிடம் உள்ள நான்கு பட்டாக்களில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக பணி நிறுத்த உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் 2012ல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும், இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான
நோக்கம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை கங்காபுர்வாலா, ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களுன் தங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை என தெரிவிக்க்பபட்டது.

வழிபாட்டு தளத்திற்கான மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பட்டியலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி, ஈஷா பவுண்டேசனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேசன் நிர்வாகி பெறவில்லை என்றும், அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,
அதில் சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...