என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் case judge N senthil Kumar for petner G sankeran for Nlc G masilamani

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்
என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம். வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கோரிய நிர்வாகத்தின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சட்டவிரோத போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில் குமார் முன் இன்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்த போது,
என்.எல்.சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, மனுதரார் கடந்த ஆண்டும் இதே 16 கோரிக்கை வைத்து போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர் அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உரிய எடுக்க மத்திய அரசு மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன் படி இந்த பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போதும் அதே கோரிக்கை தொடர்பாக வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இந்த பிரச்சினை தீர்வு கான மத்திய அரசு மற்றும் நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. பிரச்சினை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் போரட்டம் நடத்துவது சட்டவிரோதம் ஆகும். கோரிக்கை தொடர்பாக முடிவு எட்டுவதற்கு முன்னர் போரட்ட அறிவிப்பு தன்னிசையனது. தற்போது சிலர் போரட்டத்தை தூண்டி வருகின்றனர். இதன்மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு ஏற்படும் எனவே உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே விதிகளுக்கு புறம்பாக அறிவிக்கப்பட்ட இந்த போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

தொழிற்சங்க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், இந்த வழக்கு மிக ஆரம்ப நிலையிலும் தொடரபட்டுள்ளது. உரிமைக்காக வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு தொழிலாளர்கள் அடிப்படை உரிமை. தொழிலாளர் கோரிக்கை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அமைதியான முறையில் வேலை நிறுத்த போராட்டத்தில் மட்டுமே தொழிற்சங்கம் முன்னெடுக்கிறது. பணிக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது இல்லை அனுமதிக்கப்பட்ட இடத்தில் நாங்கள் எங்கள் கோரிக்கைக்காக போராடுவது சட்டவிரோதம் அல்ல எனவே தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதி என்.செந்தில்குமார், தீர்ப்பு வரும்வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும், தொழில்ச் சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது. என்.எல்.சி நிறுவனம் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும். நிறுவனத்திற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ( மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை தள்ளிவைத்தார்.

You may also like...